டெல்லியில் நடந்த தப்ளிகி ஜமாத் இஸ்லாமிய மாநாடால் இந்தியா முழுவதும் பரவிய கொரோனா - ஊடகங்கள் மறைக்கும் பகீர் உண்மை!
டெல்லியில் நடந்த தப்ளிகி ஜமாத் இஸ்லாமிய மாநாடால் இந்தியா முழுவதும் பரவிய கொரோனா - ஊடகங்கள் மறைக்கும் பகீர் உண்மை!

ஈரோட்டில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் டெல்லியில் எந்த மாநாட்டிற்குச் சென்று வந்தனர் என்பதை ஏன் எந்த தமிழக ஊடகங்களும் கூற மறுக்கின்றன? ஈரோட்டில் மட்டும் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பத்திரிக்கையாளரின் முதன்மை கடமை உண்மையை மட்டும் பதிவிடுவது. பாதி உண்மையைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் டெல்லியில் நடந்த தப்ளிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஏராளம்! அதுவும் 1,500 பேர் தமிழகத்திற்குத் திரும்பியுள்ளனர். அவர்களில் அரசிடம் இருப்பது வெறும் 819 பேரின் பெயர்கள் தான்.
நம் தமிழக செய்தி ஊடகங்கள் அது எந்த மாநாடு, யாரெல்லாம் அதில் கலந்துக்கொண்டனர் என்று கூறாவிட்டால், பிறகு எப்படி பொது மக்கள் கவனத்தோடு பாதுகாப்பாக இருக்க முடியும்? ஒரு பேச்சிற்கு வைத்துக்கொள்வோம். என் குடும்பத்தில் எனக்குத் தெரிந்த ஒரு உறவினரின் பக்கத்து வீட்டினர் யாரோ ஒருவர் இந்த மாநாட்டில் பகிர்ந்து விட்டு வந்திருக்கிறார் என்றால், இந்த சூழ்நிலையில் நான் எப்படி என்னை உஷார் படுத்திக்கொள்ள முடியும்? எப்படி நான் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்? அப்போது செய்தி ஊடகங்களின் கடமை பொறுப்பு அதிகமாகிறது அல்லவா?
சரி, மதச்சார்பின்மையோடு செய்தி ஊடகங்கள் நடந்துகொள்ள வேண்டும், ஒருவரின் மத அடையாளத்தை வைத்து இதில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று நீங்கள் நம்புகிறீர்கள். இது தான் நீங்கள் கற்று வைத்திருக்கும் போலியான மதச்சார்பின்மை!
இங்கு யாரும் மதம் தான் கொரோனாவை பரப்புகிறது என்று கூறவில்லை. உலகம் முழுவதும் வேறு நாடுகளில் கூட, குறிப்பாகத் தென் கொரியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில், மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் மூலமாக கொரோனா தொற்றியிருக்கிறது. ஆனால், எந்த நாடுகளும் இதை மறைத்ததில்லை.
ஏனென்றால், அரசுக்குத் தெரியாத ஏதேனும் ஒரு நபர் கொஞ்சம் விழித்துக்கொள்வார்களே, நாளை அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் தன்னை பாதுகாத்துக்கொள்வார்களே என்ற எண்ணத்தில் தான் இது போன்ற விஷயங்களில் வெளிப்படைத் தன்மையோடு செய்தி ஊடகங்கள் நடந்துகொள்கின்றனர். இதில் மதத்தை யாரும் ஒன்றும் குறை சொல்லவில்லை. ஆனால், உங்கள் போலி மதச்சார்பின்மை கொள்கையினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர் பிரியா.