Kathir News
Begin typing your search above and press return to search.

சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் சமூக வலைதள கணக்குகளின் விவரங்களை ஒப்படைக்க உத்தரவு - போலி கணக்குகள் கண்டிப்பாக வைத்திருக்க கூடாது.! #CISF #CISFRules

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2020 5:24 AM GMT

மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தொடர்பாக சி.ஐ.எஸ்.எப். புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதில், "படை வீரர்கள் அனைவரும் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் உள்ள தங்களின் கணக்கு விவரங்களை சி.ஐ.எஸ்.எப்.பிடம் வெளிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் 'படை வீரர்களின் சமூக வலைதள கணக்குகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அல்லது புதிய கணக்கு ஒன்றை உருவாக்கினால் அதை துறைக்குத் தெரிவிக்க வேண்டும்' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக புனைப்பெயர்களில் ஏதுவும் கணக்குகள் வைத்திருக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, இந்த விதிகளை மீறுபவர்கள் கடுமையான சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story