தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு - மகிழ்ச்சியில் மக்கள்..
தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு - மகிழ்ச்சியில் மக்கள்..

கொரோனாவுக்கு சிகிச்சை தரும் மருத்துவர், செவிலியர், தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம்: முதல்வர் எடப்பாடி சபையில் அறிவிப்பு
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் வகையில் அனைவரும் எழுந்து கரவொலி எழுப்பக் கேட்டுக்கொண்டார். அதன்படி முதல்வர் உள்பட அனைவரும் கரவொலி எழுப்பி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அதன்பின்னர், கரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், இதர சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பூதியமாக வழங்கப்படும் என்று முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முதல்வர் பாராட்டுகளையும் தெரிவித்தார்.