நவீன் பட்நாயக் இல்லத்தில் நடைபெற்ற விருந்தில் அமித்ஷா, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி பங்கேற்பு.
நவீன் பட்நாயக் இல்லத்தில் நடைபெற்ற விருந்தில் அமித்ஷா, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி பங்கேற்பு.

தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் மற்றும் ஆரோக்கியமான மத்திய - மாநில உறவுகளை வளர்ப்பதற்கான நோக்கத்துடன் ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் 24 வது கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது, ஒரிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உட்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உட்பட்டு விருந்தில் கலந்து கொண்டனர், அந்தப் புகைப்படத்தை ஒரிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அப்பொழுது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார்.