இந்தியாவிலேயே பல்வேறு துறைகளில் அதிக அளவு தேசிய விருது பெற்ற ஒரே மாநிலம் தமிழகம்தான், கமலஹாசனுக்கு முதலமைச்சர் பதிலடி!
இந்தியாவிலேயே பல்வேறு துறைகளில் அதிக அளவு தேசிய விருது பெற்ற ஒரே மாநிலம் தமிழகம்தான், கமலஹாசனுக்கு முதலமைச்சர் பதிலடி!

விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா முடிந்த பிறகு மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது நடிகர் கமலஹாசன் தமிழகம் பல்வேறு துறைகளில் பின்தங்கி உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்தார்.
நடிகர் கமலஹாசனுக்கு துறையைப் பற்றி ஏதும் தெரியாது எனவும் அவருக்கு தெரிந்தது வெறும் சினிமாதான், யாரோ சிலர் பொத்தம் பொதுவாக அவருக்கு எழுதிக் கொடுத்ததை படித்த சொல்கிறார், இன்றைக்கு தமிழகம் பல்வேறு துறைகளில் விருதுகளை குவித்து வருகிறது அவருக்குத் தெரியுமா? இந்தியாவிலேயே பல்வேறு துறைகளில் அதிக அளவு தேசிய விருது பெற்ற ஒரே மாநிலம் தமிழகம்தான் இதெல்லாம் அவருக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை ஏனென்றால் அவள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என விமர்சித்தார்.