முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர் சைமன் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு ஆறுதல்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர் சைமன் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு ஆறுதல்!

மருத்துவர் சைமன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து கொரோனா வைரஸ் அவருக்கும் பரவிய இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது உடலை நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்லும் போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர் சைமன் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி உள்ளார்.
இன்று சுமார் 12:30 மணியளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் திரு.சைமன் அவர்களின் துணைவியார் திருமதி.ஆனந்தி சைமன் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 22, 2020
அவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோரின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
இன்று மதியம் 12:30 மணியளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் திரு.சைமன் அவர்களின் துணைவியார் திருமதி.ஆனந்தி சைமன் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாகவும், அவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோரின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது டுவிட்டர் தெரிவித்துள்ளார்.