தேவையில்லாமல் வெளியே வருவீங்களா? ஒரு மணி நேரம் நில்லுங்க, சமூக இடைவெளி விட்டு உறுதிமொழி எடுங்க - நூதன தண்டனை.!
தேவையில்லாமல் வெளியே வருவீங்களா? ஒரு மணி நேரம் நில்லுங்க, சமூக இடைவெளி விட்டு உறுதிமொழி எடுங்க - நூதன தண்டனை.!

உலகையே அச்சுறுத்தும் கொரனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6மணி முதல் மதியம் 1மணி வரை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தியாவசிய தேவையின்றி நண்பர்களுடனும், நேரக்கட்டுப்பாடு முடிந்த பின்னும் மாலை நேரங்களில் தேவையின்றி நகர்வலம் வரும் வாலிபர்களை காரைக்கால் அடுத்துள்ள நெருங்காடு காவல்நிலைய போலீசார்கள் பிடித்து 1மணி நேரம் காக்க வைத்து சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்து அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரமாட்டோம் என்றும் வீட்டிற்கு செல்லும்போது கை கால்களை சுத்தமாக கழுவி விட்டு வீட்டிற்கு செல்வோம் என்றும் மேலும் பல கொரோனா வைரஸ் ஒழிப்பு வாசகங்களை உறுதிமொழி ஏற்க வைத்து இதை போல் தேவை இல்லாமல் மீண்டும் சுற்றி திரிந்து வந்தால் வழக்கு பதியப்படும் என கடுமையாக எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.