இந்த லிஸ்ட்ல உங்க பாஸ்வேர்ட் இருக்கா? அப்ப உடனே மாத்துங்க.. திருடர்கள் ஜாக்கிரதை
இந்த லிஸ்ட்ல உங்க பாஸ்வேர்ட் இருக்கா? அப்ப உடனே மாத்துங்க.. திருடர்கள் ஜாக்கிரதை
இன்றைய அதிநவீன தொழில்நுட்ப புரட்சியில் நம் வாழ்க்கை மொத்தத்தையும் ஒரு கணினிக்குள் அடக்கிவிடக்கூடும். நம் நெற்றிக்கு மேல் நிமிர்ந்திருந்த கணிப்பொறி இன்று கைகளுக்குள் சுருண்டு கிடக்கிறது. நவீன வாமனனை போல் அளவில் சிறியதாக அதன் ஆளுமையில் பெரியதாகவும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது இன்றைய தொழில்நுட்பம். இதற்குள் தொழில், பொருளாதாரம், தனிவாழ்க்கை என அனைத்தும் அடைந்து கிடக்கிறது. எல்லையின்றி பரந்துகிடக்கும் இந்த திறந்த வெளியை கட்டுபடுத்தும் ஒரே பிரம்மாஸ்திரம் கடவுச்சொற்கள் மாத்திரமே.
இன்று பெரும்பாலான அலுவலகங்கள் காகித கோப்புகளிலிருந்து கணினிக்கு மாறிவரும் வேளையில், ஊழியர்கள் தனி இருக்கை உள்ளதோ இல்லையோ, தனி கணினி உள்ளதோ இல்லையோ ஒவ்வொறுவருக்கும் தனி அக்கவுண்டுகளும், அதற்கான கடவுச்சொற்களும் உருவாக்கபடுகின்றன. அந்த அக்கவுண்டில் நிகழும் சகலத்திற்க்கும் அந்த ஊழியர்களே பொறுப்பு. அந்த அக்கவுண்டிலிருந்து முறைபடி வெளியேறுவதும், உள்
நுழைவதும் அவர்களின் கடமையாக வரையறுக்கப்பட்டுள்ளது.
தொழில்ரீதியாக மட்டுமின்றி பொருளாதார தளத்தில் கடவுச்சொல்லின் முக்கியத்துவம் அலாதியானது. வங்கிகளில் பண பரிமாற்றம் செய்ய, இணையத்தில் பொருட்கள் வாங்க, நம் கட்டணங்களை செலுத்த என பல இடங்களில் கடவுச்சொற்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மனிதர்களின் தனிவாழ்க்கையில் ரகசியங்கள், அந்தரங்கங்களை பேணி காக்கும் நம்பகமான சாவி கடவுச்சொல்.
பூட்டுகளை திறக்க சாவிகள் இருந்தால், அதற்கு கள்ளச்சாவி இருப்பதும் இயல்புதானே. அந்த அடிப்படையில் எளிதில் கடத்தப்படும் கடவுச்சொற்களின் பட்டியலை மேலை நாடுகளில் பிரபலமாக இருக்கும் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. உலகில் பெரும்பாலான நபர்களால் அதிகமாக உருவாக்கப்பட்டு, இணைய திருடர்களால் எளிதில் கணிக்கப்பட்டு கடத்தப்படும் கடவுச்சொற்கள் இவை......
1. password
2, 123456
3. 12345678
4. abc123
5. qwerty
6. monkey
7. iloveyou
8.111111
9. welcome
10. 123123
11.654321
12.aaaaaa
13. football
14. 000000
15. dragon
சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல் இது..... இதில் உங்களுடைய கடவுச்சொல்லும் இடம்பெற்றுள்ளதா? ஆம்மென்றால் இது மாற்றத்திற்க்கான நேரம். எளிதில் கணிக்கப்படாத ஒரு கடாவுச்சொற்களை உருவாக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் தரும் டிப்ஸ் இவை....
எட்டு எழுத்துக்களுக்கு மேலானாதாக இருக்க வேண்டும், ஆங்கில எழுத்துக்களில் பெரிய எழுத்துரு, சிறிய எழுத்துரு, மற்றும் எண்கள் என அனைத்தும் கலந்தவையாக உருவாக்கப்பட வேண்டும். நண்பர்கள் உறவினர்கள் எளிதில் கணிக்கப்படக்கூடிய உங்கள் பெயர், மகன் மகள் உறவினர் போன்றோரின் பெயர்கள், உங்கள் பிறந்த நாள் போன்றவற்றை கடவுச்சொற்களாக உருவாக்குவதை தவிர்க்கலாம். என இன்னும்
பல அறிவுரைகளுடன் நீள்கிறது இந்த பட்டியல்.
மொத்ததில் நம்மை சார்ந்த, நம் பொறுப்பில் விடப்பட்ட தரவுகளுக்கும், தகவல்களுக்கும் நாமே பொறுப்பு. எல்லா துறைகளிலும், தளங்களிலும் வளர்ச்சிகளை வரவேற்கவேண்டுமானால் நேர்மறை விளைவுகள், எதிர்மறை விளைவுகள் என இரண்டையும் கடப்பது அவசியமாகிறது!!! இதில் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதன் ஒருத்துளியான கடவுச்சொல்லும் விதிவிலக்கா என்ன?
என்ன நண்பர்களே மாற்றிவிட்டீர்களா உங்கள் கடவுச்சொல்லை!!!!