நெருக்கடி காலத்தில் புகாரா? புன்னகையா? எது உங்கள் சாய்ஸ்..
நெருக்கடி காலத்தில் புகாரா? புன்னகையா? எது உங்கள் சாய்ஸ்..
மேலை நாட்டு இலக்கியத்தில் ஓர் பிரபல கதாபாத்திரம் உண்டு. ராபின்ஷன் க்ருஷே என்பது அவர் பெயர். அவர் ஒரு பாலைவன தீவில் எந்த துணையுமின்றி தனிமையில் தவித்து கொண்டிருந்தார். எப்படியோ உயிர் பிழைத்து ஆதரவு ஏதுமின்றி தனித்திருந்தார். அவர் அந்த தீவில் இருந்த சமயத்தில் அவருடைய தருணங்களை இரண்டு வகையாக பிரித்து கொண்டார். ஒன்று ஆதரவின்றி தவிக்கும் அந்த தீவில் அவருக்கு நிகழும் நன்மைகள், அடுத்து யார் துணையுமின்றி உயிர்வாழ்வதே சிரமமான அந்த தீவில் அவருக்கு நிகழும் தீமைகள்.
அந்த பட்டியலில் அவர் இவ்வாறு எழுதினார்,
நான் எந்த துணையுமின்றி இந்த பாலைவன தீவில் தவிக்கிறேன் இது எனக்கு நிகழ்ந்த தீமை.
என்னோடு கப்பலில் வந்த அனைவரும் இறந்து போன போதும் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் இது எனக்கு நிகழ்ந்த நன்மை.
என்னோடு இந்த தீவில் யாரும் இல்லை தனிமையில் அவதிப்படுகிறேன் இது எனக்கு நிகழ்ந்த தீமை
ஆனால் நான் பட்டினி கிடக்கவில்லை இது எனக்கு நிகழ்ந்த நன்மை.
எனக்கு உடுத்த உடையில்லை இது நான் எதிர்கொண்ட தீமை.
இந்த இடம் அனலாக கொதிக்கிறது இங்கு ஆடைகள் தேவையேயில்லை இது எனக்கு நிகழ்ந்த நன்மை.
தீடிரென என்னை ஏதேனும் மிருகம் தாக்கினால் என்னை காத்துக்கொள்ள என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை இது என் தீமை.
ஆனால் நான் தவித்திருக்கும் இந்த தீவில் எந்த மிருகங்களும் இல்லை இது எனக்கு நிகழ்ந்த தீமை.
என நீண்ட பட்டியலில் இறுதியாக அவர் எழுதினார்,
என்னிடம் பேச யாரும் இல்லை இது எனக்கு நிகழ்ந்த அவலம்
யார் துணையும் இல்லாது போன இந்த தருணத்தில், என் பலத்தை நானே புரிந்து கொள்ள உதவியாக இருந்த இந்த சூழ்நிலைகள் எனக்கு நேர்ந்த அற்புதம்.
ராபின்ஷனுக்கு நேர்ந்த சூழ்நிலை மாத்திரம் அல்ல, இந்த குணமே மேலை நாட்டு இலக்கியத்தில் ஓர் பிரபல கதாபாத்திரம் உண்டு. ராபின்ஷன் க்ருஷே என்பது அவர் பெயர். அவர் ஒரு பாலைவன தீவில் எந்த துணையுமின்றி தனிமையில் தவித்து கொண்டிருந்தார். எப்படியோ உயிர் பிழைத்து ஆதரவு ஏதுமின்றி தனித்திருந்தார். அவர் அந்த தீவில் இருந்த சமயத்தில் அவருடைய தருணங்களை இரண்டு வகையாக பிரித்து கொண்டார். ஒன்று ஆதரவின்றி தவிக்கும் அந்த தீவில் அவருக்கு நிகழும் நன்மைகள், அடுத்து யார் துணையுமின்றி உயிர்வாழ்வதே சிரமமான அந்த தீவில் அவருக்கு நிகழும் தீமைகள்.
அந்த பட்டியலில் அவர் இவ்வாறு எழுதினார்,
நான் எந்த துணையுமின்றி இந்த பாலைவன தீவில் தவிக்கிறேன் இது எனக்கு நிகழ்ந்த தீமை.
என்னோடு கப்பலில் வந்த அனைவரும் இறந்து போன போதும் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் இது எனக்கு நிகழ்ந்த நன்மை.
என்னோடு இந்த தீவில் யாரும் இல்லை தனிமையில் அவதிப்படுகிறேன் இது எனக்கு நிகழ்ந்த தீமை
ஆனால் நான் பட்டினி கிடக்கவில்லை இது எனக்கு நிகழ்ந்த நன்மை.
எனக்கு உடுத்த உடையில்லை இது நான் எதிர்கொண்ட தீமை.
இந்த இடம் அனலாக கொதிக்கிறது இங்கு ஆடைகள் தேவையேயில்லை இது எனக்கு நிகழ்ந்த நன்மை.
தீடிரென என்னை ஏதேனும் மிருகம் தாக்கினால் என்னை காத்துக்கொள்ள என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை இது என் தீமை.
ஆனால் நான் தவித்திருக்கும் இந்த தீவில் எந்த மிருகங்களும் இல்லை இது எனக்கு நிகழ்ந்த தீமை.
என நீண்ட பட்டியலில் இறுதியாக அவர் எழுதினார்,
என்னிடம் பேச யாரும் இல்லை இது எனக்கு நிகழ்ந்த அவலம்
யார் துணையும் இல்லாது போன இந்த தருணத்தில், என் பலத்தை நானே புரிந்து கொள்ள உதவியாக இருந்த இந்த சூழ்நிலைகள் எனக்கு நேர்ந்த அற்புதம்.
ராபின்ஷனுக்கு நேர்ந்த சூழ்நிலை மாத்திரம் அல்ல, இந்த குணமே ஓர் மாபெரும் அற்புதம். எந்த சூழலிலும் அதன் நேர்மறை பக்கங்களை மட்டும் பார்க்கும் பழக்கம் நம் வருத்தத்தை, அழுத்தத்தை, பயத்தை உடைத்தெரிகிறது. வாழ்க்கை கொடுக்கும் சவால் நிறைந்த சூழல்கள் குறித்து புகார் தெரிவிக்காமல் புன்னகைக்க பழகிவிட்டால் இலக்குகள் எட்டும் தூரம் தான்.
ஓர் மாபெரும் அற்புதம். எந்த சூழலிலும் அதன் நேர்மறை பக்கங்களை மட்டும் பார்க்கும் பழக்கம் நம் வருத்தத்தை, அழுத்தத்தை, பயத்தை உடைத்தெரிகிறது. வாழ்க்கை கொடுக்கும் சவால் நிறைந்த சூழல்கள் குறித்து புகார் தெரிவிக்காமல் புன்னகைக்க பழகிவிட்டால் இலக்குகள் எட்டும் தூரம் தான்.
பெரும்பாலானோர் ஒரு கோப்பையில் காலியாக இருக்கும் அரைப்பகுதியை மட்டுமே பார்ப்பார்கள். நிறைந்திருக்கும் மீதி பாதி பகுதியை பார்க்க தவறிவிடுவார்கள். இது ஒரு பிரபலமான குணாதிசயம். இந்த எண்ண முறையும், குணாதிசயமும் பலருக்கு உண்டு. நல்லவைகளை விடவும் அதன் எதிர்மறை பகுதியே புத்திக்கு விரைவாக எட்டும். இந்த இயல்பான குணத்தை உடைக்கிற வித்தை தெரிந்தால், கெட்டவைகளிலும் நல்லவைகளை கொய்தெடுக்கும் யுத்தி புரிந்தால் நாமே வெற்றியாளர்.
ஓரு விருந்துக்கு நண்பர்கள் இருவர் சென்றால், அதில் ஒருவருக்கு உணவு குறித்து, அங்கிருக்கும் சூழல் குறித்து புகார்கள் இருந்திருக்கும். அவருடைய எதிர்பார்ப்புகள் நிறைவடையாமல் அந்த விருந்தே ஒரு மோசமான அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் அவருடன் வந்த நண்பருக்கோ அங்கு சூழ்ந்திருக்கும் உறவுகளுடன் கைக்குலுக்குவதும், அனைவரோடு ஒன்றினைந்து சுவையை மறந்து உணவு உட்கொள்வதும் மனமகிழ்ச்சியை தந்திருக்கும். இடமும் சூழலும் ஒன்றுதான். ஆனால் ஒருவருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது. ஒருவருக்கோ உற்சாகமளிக்கிறது. விருந்து ஒன்றானாலும் ஒருவருக்கு கிடைத்திருப்பது மனமகிழ்ச்சி, மற்றொருவர் பெற்றிருப்பது மன அழுத்தம்.
இதை போல தினசரி வாழ்வில் நாம் கடந்து போகிற சூழ்நிலைகள் ஏராளம். நிகழ்கால சூழ்ல்களை பார்த்து புன்னகைக்கிறோமோ, புகார் சொல்கிறோமா என்பதே வருங்காலத்தின் வெற்றியை, மகிழ்ச்சியை தீர்மானிக்கிறது.
என்ன நண்பர்களே, புன்னகைக்க துவங்கிவிட்டீர்களா??