Kathir News
Begin typing your search above and press return to search.

மத்தியபிரதேசத்தில் காங்கிரசார் அராஜகம்! கட்சி போஸ்டர்களை அகற்றிய நகராட்சி ஊழியர்களை அடித்து துவம்சம் செய்தனர்.!

மத்தியபிரதேசத்தில் காங்கிரசார் அராஜகம்! கட்சி போஸ்டர்களை அகற்றிய நகராட்சி ஊழியர்களை அடித்து துவம்சம் செய்தனர்.!

மத்தியபிரதேசத்தில் காங்கிரசார் அராஜகம்! கட்சி போஸ்டர்களை அகற்றிய நகராட்சி ஊழியர்களை அடித்து துவம்சம் செய்தனர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Nov 2019 10:37 AM GMT



மத்திய பிரதேச சுகாதார அமைச்சர் துளசி சிலவத், இவர் இந்தூர் மாவட்டம் சான்வர் சட்டசபை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். நேற்று இவரது பிறந்த நாளை ஆதரவாளர்கள் இந்தூர் நகரில் தடபுடலாக கொண்டாடினர். இதற்காக சாலைகளின் இரு பக்கங்களிலும் தலைவர்கள் படங்கள் மற்றும் வாழ்த்து பேனர்களையும் மற்றும் பதாகைகளையும் வைத்திருந்தனர்.


பொது சுவர்களில் சுவரொட்டிகள் ஓட்டக் கூடாது என்ற சட்டத்தை மீறி சுவரொட்டிகளையும் ஒட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று விழா நிகழ்ச்சிகள் முடிந்தும் இவற்றை அகற்றவில்லை. ஏற்கனவே இந்தூர் நகரம் சிறந்த நகர பராமரிப்புக்காக நான்காவது முறையாக தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் கமல் நாத் இந்தூர் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.


இதை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் முக்கிய சாலைகளின் இரு பக்கமும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், சுவரொட்டிகளை அப்புறப்படுத்தினர். இது தெரிந்த அமைச்சர் துளசி சிலவத் ஆதரவாளர்கள் கும்பலாக வந்து மாநகராட்சி பணியாளர்களை அடித்து துவம்சம் செய்தனர். ஊழியர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். அங்கு வந்த அதிகாரிகளையும் தாக்கினர். தங்கள் கட்சி முதல்வரின் உத்தரவுக்கு கூட மரியாதை தராமல், அரசு ஊழியர்களையே காங்கிரசார் தாக்கிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Translated Article From OP INDIA


Next Story
கதிர் தொகுப்பு
Trending News