அரசு ஒன்றும் செய்யவில்லை என தவறான தகவல்களை பரப்பும் ராகுல் காந்தி, சாடும் பா.ஜ.க!
அரசு ஒன்றும் செய்யவில்லை என தவறான தகவல்களை பரப்பும் ராகுல் காந்தி, சாடும் பா.ஜ.க!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசால் இது வரை 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பா.ஜ.க. அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்திலேயே தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கபடுகிறார்கள். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் பூனாவில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதிலும் மேலும் 19 ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் மக்களிடைய விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்பபட்டு வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனத்திடம், மத்திய அரசு தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளது.
மேலும் ராகுல் காந்தி தவறான தகவல்களை பரப்பி பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தவர்கள் என்றும் இந்தியாவில் இது வரை 80 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்னர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.