இந்து கடவுள் பரசுராமரை இழிவு படுத்தி பேசிய கோவா காங்கிரஸ் மூத்த தலைவர் கைது!!
இந்து கடவுள் பரசுராமரை இழிவு படுத்தி பேசிய கோவா காங்கிரஸ் மூத்த தலைவர் கைது!!

கோவா மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ராம்கிருஷ்ணா ஜல்மி. இவர் ஒரு இந்துவாக இருந்த போதிலும் இங்குள்ள திமுகவினரைப் போல அங்குள்ள கிறிஸ்தவர்களின் ஆதரவைப் பெற இந்து கடவுள்களின் பெயரைக் கூறி அவதூறு செய்து ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துவது வழக்கம். மதச்சார்பின்மையை பற்றி வாய்கிழிய பேசும் சிறுபான்மை மத வெறியர்களும் அவரை ஊக்குவித்து தங்கள் ஆதரவை தருவார்கள்.
இந்த நிலையில், சென்ற 2017 ல் கோவா சட்டமன்றத் தேர்தலில் பிரியோல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நின்ற அவர் பிரச்சாரத்தின் போது இந்து கடவுள்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார். மாநில இந்து சேனாவினர் இது குறித்து புகார் அளித்ததை அடுத்து அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கோவாவில் சர்ச் ஒன்றில் சிறுபான்மை அமைப்புகள் நடத்திய CAA வுக்கு எதிரான பேரணி, ஆர்பாட்டம் ஒன்றில் அவர் பேசுகையில் மகா விஷ்ணுவின் 6 வது அவதாரமாக மதிக்கப்படும் பரசுராமரை பற்றி அவர் ஒரு பயங்கரவாத கடவுள் என்றும் பாலியல் குற்றவாளி என்பது போலவும் பேசினார்.மேலும் அங்கு வசிக்கும் குறிப்பிட்ட இந்து சாதியினரை குறிப்பிட்டும் அவதூறாக பேசினார். அதை அங்குள்ளவர்கள் கை தட்டி இரசித்தனர்.
இது குறித்த வீடியோ கிளிப்புகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை அடுத்து அங்குள்ள கவுரங் பிரபு மல்கர்னெக்கர் என்பவரும் இந்து அமைப்புகளும் புகார் அளித்ததன் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 295 (ஏ) மற்றும் 153 (ஏ) பிரிவுகளின் கீழ் ஜல்மி கைது செய்யப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டு (குற்றப்பிரிவு) பங்கஜ் குமார் தெரிவித்தார்.