Kathir News
Begin typing your search above and press return to search.

ஆகஸ்ட் ஐந்து கருப்பு தினமாம் - கூறுவது அப்சல் குருவை தியாகி என்ற காங்கிரஸ் தலைவர் சல்மான் நிசாமி.!

இந்த காங்கிரஸ் தலைவர் அவருடைய தேசவிரோத கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர்

ஆகஸ்ட் ஐந்து கருப்பு தினமாம் - கூறுவது அப்சல் குருவை தியாகி என்ற காங்கிரஸ் தலைவர் சல்மான் நிசாமி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2020 6:25 AM GMT

இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை தவறாமல் கூறி வருவதற்காக அறியப்படும் சர்ச்சைக்குரிய காங்கிரஸ் தலைவர் சல்மான் நிசாமி, ஆகஸ்ட் 5 ம் தேதியை ஜம்மு-காஷ்மீரின் கருப்பு தினமாக அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் இதே ஆகஸ்ட் 5ல், அரசியலைப்பு சட்டத்தில் உள்ள சட்டப்பிரிவு 370 மற்றும் 35A ஆகியவை நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டது. அதனுடன் சேர்த்து அந்த மாநிலம் ஜம்மு&காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவரான சல்மான் நிஜாமி ஐந்தாம் தேதி ஆகஸ்ட் ஜம்மு-காஷ்மீருக்கு கருப்பு தினம் என்று தெரிவிக்கும் படி ஒரு ட்வீட் வெளியிட்டார். அவர் மேலும் சட்டப்பிரிவு 370 மறுபடியும் கொண்டுவரப்பட்டு ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



இந்த காங்கிரஸ் தலைவர் அவருடைய தேசவிரோத கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். அவர் வெளிப்படையாகவே தனி நாடாக காஷ்மீர் மாற வேண்டும் என்று கூறியவர். எனவே இதன் மூலம் அந்த மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிரிவினைவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஆதரவளிப்பது தெளிவு. இவர் தான் அப்சல் குரு ஒரு தீவிரவாதி அல்ல என்றும் ஒரு தியாகி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு முறை அவர் "தும் கிட்னே அப்சல் மரோ கே, ஹர் கர் அஃப்ஸல் நிக்லே கா" இவ்வாறு ட்வீட் செய்திருக்கிறார்.

மற்றொரு முறை, காஷ்மீர் மாநிலத்தில் பேரணிகள் நடத்தினால் பா.ஜ.க தலைவர்களை தூக்கில் தொங்க விடுவேன் என்று மிரட்டுகிறார். இந்திய முஸ்லிம்களுக்காக மற்றொரு தனிநாடு வேண்டும் என்று கூறும் இவர் ஒருமுறை "ஐ ஹேட் யூ இந்தியா..ஐ மீன் அப்சல்குரு" என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்த காங்கிரஸ் தலைவர் ஆகஸ்ட் 5 ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிப்பது பாகிஸ்தான் இந்த தினத்தை எவ்வாறு அனுசரிக்கிறதோ அதனுடன் ஒத்து செல்கிறது. பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பல பிரச்சார நிகழ்ச்சிகளை இந்த நாளைக்கு ஏற்பாடு செய்துள்ளது. பாகிஸ்தான் ராணுவமும் ஆகஸ்ட் 5ம் தேதியை கருப்பு தினம் என அனுசரிக்கும் படி ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பல அரசியல் கட்சிகளும் ஐந்தாம் தேதி ஆகஸ்ட் கருப்பு தினமாக அனுசரித்து உள்ளனர். பல பிரிவினைவாத கட்சிகளும் இதில் அடக்கம். இந்த வருடம் ஆகஸ்ட் 5ம் தேதி மற்றொரு வரலாற்று பூர்வ நிகழ்வை இந்தியா சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் தான் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5 நடைபெறப்போகிறது. பிரதமர் மோடி அந்த விழாவில் கலந்து கொள்வார்.

https://www.opindia.com/2020/07/congress-salman-nizami-5th-august-black-day-jammu-and-kashmir/

Next Story