Kathir News
Begin typing your search above and press return to search.

கோதாவரி - கிருஷ்ணா - காவேரி நதிகள் இணைப்புக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு! கண்டிக்க திராணியற்ற ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் கோஷ்டிகள்!!

கோதாவரி - கிருஷ்ணா - காவேரி நதிகள் இணைப்புக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு! கண்டிக்க திராணியற்ற ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் கோஷ்டிகள்!!

கோதாவரி - கிருஷ்ணா - காவேரி நதிகள் இணைப்புக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு! கண்டிக்க திராணியற்ற ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் கோஷ்டிகள்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2019 11:58 AM GMT



“தமிழகம் தொடர்ந்து தண்ணீர் பிரச்சினையை சந்தித்து வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரும் வகையில் கோதாவரி-கிருஷ்ணா - காவிரி நதிகளை இணைப்பதுதான் எனது முதல் வேலை” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.


பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று இரவுதான் இப்படி கூறினனார் நிதின் கட்கரி. அதாவது தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வி அடைந்ததை அறிவித்த சில மணி நேரத்தில் இந்த கருத்தை வெளியிட்டார் நிதின் கட்கரி.


“என்ன ஒரு அற்புதமான மனிதர் இவர். பா.ஜ.க.வுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் வாக்களித்த போதும் தமிழ்நாட்டின் மேம்பாட்டைதான் முதல் திட்டமாக வைத்திருக்கிறார். இந்த கட்சியைத் தான் தமிழ்நாடு அங்கீகரிக்க தவறிவிட்டது” என்று தமிழர்கள் வெட்கி தலைகுனிந்த தினம் அன்று.


மோடி அரசு 2-வது முறையாக பதவி ஏற்றதும், “ஜல் சக்தி” என்ற அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அதோடு நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பான பூர்வாங்க வேலைகள் தொடங்கி உள்ளன.


நதிகள் இணைக்க திட்டம் தயாராகிறது, கோதாவரி-கிருஷ்ணா - காவிரி நதிகளை இணையப்போகிறது என்பதை தெரிந்துகொண்ட காங்கிரஸ் தனது நிஜ முகத்தை காட்டியுள்ளது.


ஆமாம், மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து பேசினார்.


அப்போது அவர், “தண்ணீர் பிரச்சினைக்காக ‘ஜல்சக்தி’ அமைச்சகம் உருவாக்கி இருப்பதை வரவேற்கிறேன். ஆனால் நதிகள் இணைப்பு திட்டம், பேராபத்தை உண்டாக்கி விடும். நதிகள் இணைப்பு திட்டத்தை ஜல்சக்தி அமைச்சகம் கைவிட வேண்டும்.” என்று ஜெய்ராம் ரமேஷ் நஞ்சை கச்கினார்.


அவரது கருத்துக்கு ஒட்டுமொத்த காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். அப்படியானால் இந்த நாட்டில் நதிகள் இணையக் கூடாது என்பதில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது. நாடு முன்னேறிவிடக் கூடாது, விவசாயம் செழித்துவிடக் கூடாது என்பதில்தான் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு அக்கறை?


இதே ஜெய்ராம் ரமேஷ் மத்திய அமைச்சராக இருந்த போதுதான், தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிகட்டுக்கு காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி அரசு தடை செய்தது.


இவர் காங்கிரசின் கருத்தைத்தான் மாநிலங்களவை மூலம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தினார். இதன் மூலம் தமிழர்களின் நீண்டநாள் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும், கோதாவரி-கிருஷ்ணா - காவிரி நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வேட்டு வைக்கிறது காங்கிரஸ்.


இப்படி தமிழர்களுக்கு எதிராக, தமிழக விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ள காங்கிரசை தி.மு.க தலைவர் ஸ்டாலினோ, வைகோவோ, திருமாவளவனோ, கி.வீரமணியோ ஒப்புக்குகூட கண்டிக்கவில்லை. வாய்கிழிய பேசிக்கொண்டு திரியும் கனிமொழி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.


இதுதான் இவர்கள் தமிழர்களுக்கு செய்த நன்மை.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News