Kathir News
Begin typing your search above and press return to search.

கருத்து சுதந்திரத்தை நசுக்கும் காங்கிரஸ் : அர்னாப் கோஸ்வாமியை 12 மணிநேரத்திற்கும் மேல் விசாரணை செய்த மும்பை காவல்துறை.!

கருத்து சுதந்திரத்தை நசுக்கும் காங்கிரஸ் : அர்னாப் கோஸ்வாமியை 12 மணிநேரத்திற்கும் மேல் விசாரணை செய்த மும்பை காவல்துறை.!

கருத்து சுதந்திரத்தை நசுக்கும் காங்கிரஸ் : அர்னாப் கோஸ்வாமியை 12 மணிநேரத்திற்கும் மேல் விசாரணை செய்த மும்பை காவல்துறை.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 April 2020 7:46 AM IST

பால்கர் சாதுக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து சோனியா காந்தியை கேள்வி கேட்டதால் ரிபப்லிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் பன்னிரெண்டு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை செய்துள்ளனர். நேற்று(27 ஏப்ரல்) காலை 9 மணிக்கு என்.எம் மார்க் ஜோஷி காவல் நிலையத்திற்கு சென்றார் அர்னாப் கோஸ்வாமி.

பால்கர் சாதுக்கள் படுகொலைக்கு சோனியா காந்தி மெளனம் காத்ததை கேள்வி கேட்ட அர்னாப் கோஸ்வாமி மீது நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் பல காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விசாரணை இரவு வரை தொடர்ந்தது.

விசாரணை முடிவடைந்து வெளியே வந்த அர்னாப் கோஸ்வாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கேள்வி கேட்டதால் தான் தன்னை காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தினர் என்று உறுதிப்படுத்தினார்.

விசாரணை முடிந்து அர்னாப் கோஸ்வாமி கூறுகையில், "நான் கூறிய கருத்துகளுக்கு நான் துணை நிற்கிறேன் என்பதை தெளிவுபடுத்தியுள்ளேன். நான் கூறிய அனைத்தும் உண்மை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளேன்", என்று கூறினார். பால்கர் சாதுக்கள் படுகொலை குறித்து ரிபப்லிக் தொலைக்காட்சியின் விவாதங்கள் தொடரும் என்று அவர் கூறினார்.

சோனியா காந்திக்கு எதிரான கருத்துக்களை அர்னாப் கோஸ்வாமி கூறினார் என்று மும்பை காவல்துறையினர் அவருக்கு 12 மணி நேரத்திற்குள் இரண்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ரிபப்லிக் தொலைக்காட்சி நேற்று (ஏப்ரல் 27) செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கிடையில் அர்னாபின் காரைத் தாக்கிய இரு காங்கிரஸ் குண்டர்களுக்கும் மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News