Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தியில் ராமர் கோயில்: இது வரை காங்கிரஸ் கட்சி அடித்த அந்தர் பல்டிகளும் அதனால் விழுந்த அடியும்.!

பலகோடி இந்துக்கள் எதிர்பார்த்திருந்த தருணம் இதோ வந்துவிட்டது. ராமபிரான் அவர் வீட்டிற்கு திரும்பி வருகிறார்.

அயோத்தியில் ராமர் கோயில்: இது வரை காங்கிரஸ் கட்சி அடித்த அந்தர் பல்டிகளும் அதனால் விழுந்த அடியும்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 4:16 AM GMT

செப்டம்பர் 2007ல் மத்திய அரசை நடத்தி வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, (UPA1) ராமபிரான் வாழ்ந்ததற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது

2007ல் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் நீதிமன்றத்தில் செய்த பிரமாணத்தில், வால்மீகி இராமாயணமும் ராமசரிதங்களும் இந்தியாவின் பழங்கால இலக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாலும், அங்கே விவரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் நிகழ்ந்ததற்கான நிரூபிக்கப்பட்ட வரலாற்று பதிவுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்தது. 'ராமர் சேது' பாலத்தை சேதப்படுத்தும் என்பதால் ராமர் சேது திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது இந்த பிரமாணத்தை காங்கிரஸ் அரசு பதிவு செய்தது.





ராகுல்காந்தியின் நெருங்கிய கூட்டாளியும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கபில்சிபல் ராம ஜென்மபூமி வழக்கில் சுன்னி வக்ப் வாரியத்தின் சார்பில், அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுவதை எதிர்த்து வாதிட்டார். 2019 தேர்தல் வரும்வரை தீர்ப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக தாமதிக்க பல தந்திரங்களையும் உபயோகப்படுத்தினார்.

தன்னுடைய 'தனிப்பட்ட முறையில்' சிபல், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எதிர்த்து வாதிடுவதாக கூறலாம். ஆனால் ராகுல் காந்தியை விட குறைவான IQ உள்ள ஒருவர் தான் அதை நம்புவார். மற்றொரு புகழ் பெற்ற காங்கிரஸ் தலைவர் சசிதரூர் இதற்கு முன்னால், எந்த ஒரு 'நல்ல ஹிந்துவும்' பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட விரும்பமாட்டார்கள் என்று தெரிவித்தார்.

தரூர் மேலும் கூறுகையில் ஒருவரின் இதயத்தில் தான் ராமர் கோவில் இருக்கவேண்டும் என்றார். தரூர், 'நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்' என்று ஒரு புத்தகம் வேறு எழுதிவிட்டார். அந்த புத்தகம் வெறும் வாய்ச்சவடால் தான் போலிருக்கிறது.

2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ராமபிரான் இருந்ததையே எத்தனை காலம் மறுத்துவந்த காங்கிரஸ் கட்சி, ஹிந்து ஓட்டுகளை குவிப்பதற்காக அதிக வேகத்தில் சென்றது. திடீரென்று, அயோத்தியில் ஒரு ராமர் கோவில் கட்டித் தருவோம் என்று வாக்களித்தது. அதுவும் ஒரு காங்கிரஸ் பிரதமரின் ஆட்சியின் கீழ்தான் ராமர்கோவில் வருமென்று கூறினார்கள். ராகுல்காந்தியின் போஸ்டர்களில் திடீரென்று ராமபிரான் தோன்றினார்.

காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, அதன் அதைச்சார்ந்த மொத்த கும்பலும் ராமர்கோவில் அயோத்தியில் கட்ட கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். யோசித்துப் பாருங்கள், அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்த்து உண்மை பேசுபவர்கள் என்று தங்களைத் தாங்களே 'அறிவுஜீவியாக' காட்டிக் கொண்ட பலரும் பா.ஜ.கவின் 'ராமர் கோவிலை கட்டுவோம்' என்ற வாக்குறுதியை நிறைவேற்றவே மாட்டார்கள் என்று ஏளனம் செய்தார்கள. உண்மையாகவே ராமர் கோவிலை கட்டி விட்டால் இனிமேலும் கொடுப்பதற்கு அவர்களுக்கு வாக்குறுதிகள் இருக்காது என்று கிண்டல் செய்தார்கள்.

ஆனால் என்ன நடந்தது?

பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் தான் ராமர் கோவிலை கட்ட போகிறது. அதன் பிரதமர் நரேந்திர மோடிதான் அதன் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கப் போகிறார். அதுவும் உச்சநீதிமன்றம் ஒருமனதாகத் தீர்ப்பு கொடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே.

இப்போது மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல் நாத், ஹனுமான் மந்திரம் ஓதப்போகிறோம், வெள்ளி செங்கல் அனுப்பி வைத்துள்ளோம் என்று ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.

"இந்துக்கள் ஒன்றிணைந்து விட்டால், காங்கிரஸ் கட்சினர் பூணூலை சட்டைக்கு வெளியே போடுவார்கள்" என்ற வீர சாவர்க்கரின் தீர்க்க தரிசனத்தை சில நாட்களாக காங்கிரஸ் நிறைவேற்றி வருகிறது.

பலகோடி இந்துக்கள் எதிர்பார்த்திருந்த தருணம் இதோ வந்துவிட்டது. ராமபிரான் அவர் வீட்டிற்கு திரும்பி வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News