ஜெபத்தினால் மட்டுமே கொரோனா போன்ற கொள்ளை நோய்களை விரட்டமுடியும் - வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் மோகன்.சி.லாசரஸ்!
ஜெபத்தினால் மட்டுமே கொரோனா போன்ற கொள்ளை நோய்களை விரட்டமுடியும் - வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் மோகன்.சி.லாசரஸ்!

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் சுகாதாரத் துறையினர் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா தொடர்பான மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
கொரோனா பரவுதலை தடுக்க மக்கள் கூட்டமாக கூடுதலை தவிர்க்க வேண்டும் என்று மத்திய- மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில், சில போதகர்கள் கொரோனாவை விரட்ட தாம்பரம், திருக்கோவிலூரில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக மூன்று வாரங்களுக்கு முன்பே இயேசு விடுவிக்கிறார் தலைமை போதகர் மோகன்சி லாசரஸ் ஜெபத்தினால் மட்டுமே கொரோனா போன்ற கொள்ளை நோய்களை விரட்டமுடியும் என்று அறிவித்துவிட்டார்.
ஏற்கனவே ஒரு சர்ச்சில் பாதிரியார் ஒரே பாட்டிலை வைத்து பல பேருக்கு புனித தீர்த்தம் கொடுத்து, 40 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், மீண்டும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு பக்கம் நடந்தாலும் மக்களின் நலனில் அக்கறை உள்ள சில மருத்துவர்கள் மக்களை அச்சுறுத்தாமல் , எளிதாக மேற்கொள்ளக்கூடிய சில முன் எச்சரிக்கை டிப்ஸ்களை வழங்கி வருவது சற்று ஆறுதலாக உள்ளது.