"32 டிகிரி வெப்பத்துக்கு மேல் கொரோனாவால் ஆதிக்கம் செலுத்த முடியாது.. விரைவில் நிலைமை சரியாகிவிடும்": பிரபல மருத்துவ நிபுணர் ஆய்வு கருத்து
"32 டிகிரி வெப்பத்துக்கு மேல் கொரோனாவால் ஆதிக்கம் செலுத்த முடியாது.. விரைவில் நிலைமை சரியாகிவிடும்": பிரபல மருத்துவ நிபுணர் ஆய்வு கருத்து

கரோனாவின் வீச்சு இன்னும் எவ்வளவுக்கு விரியும், எத்தனை நாட்களுக்குத் தொடரும் போன்ற கேள்விகள் எல்லோரையும் சுற்றிவரும் நாட்களில் சீக்கிரமே நாம் பழைய சூழலுக்குத் திரும்பிவிடுவோம் என்று சில மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சொல்லிவருகின்றனர்.
"நாம் கரோனாவை வெல்வோம். சமூக இடைவெளி நடவடிக்கை மொத்தமாகவே ஐந்து வாரங்களுக்கு மேல் இந்தியாவில் தேவைப்படாது" என்கிறார் மருத்துவர் டி.நாகேஷ்வர் ரெட்டி. இவர் சர்வதேசப் புகழ் பெற்ற குடல்-இரைப்பை சிகிச்சை நிபுணர். அதிக வெப்பம் நிலவும் பிரதேசங்களில் கரோனாவின் வீச்சு குறைவாகவே இருக்கும் என்று சொல்லும் அமெரிக்காவின் எம்ஐடியின் ஆய்வறிக்கை அடிப்படையில் இவர் பேசுகிறார்.
"32 டிகிரி வெப்பத்துக்கு மேல் கரோனாவால் ஆதிக்கம் செலுத்த முடிவதில்லை. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் இதற்கும் மேல்தான் காய்கிறது. குளிர்சாதன வசதியுள்ள இடங்களில் வேண்டுமானால் அது தப்பிப் பிழைக்கலாம். சமூகத் தொற்று ஏற்படாமல் இந்தியாவில் கட்டுப்படுத்திவிட்டோம் என்றே நான் கருதுகிறேன்" என்றெல்லாம் சொல்கிறார் நாகேஷ்வர்.
"ஏப்ரல் 15-க்கு மேலும் ஊரடங்கு தொடரும் என்று வரும் செய்திகள் ஆதாரமற்றவை" என்ற மத்திய அரசின் அறிவிப்பும்கூட இத்தகைய கணிப்பின் மீதுதான் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தோன்றுவதாக கூறப்படுகிறது.