Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரோனவை தடுக்காமல் விட்டால் உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்களை பாதிக்கக்கூடும் என்கிறது ஆய்வு

கொரோனவை தடுக்காமல் விட்டால் உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்களை பாதிக்கக்கூடும் என்கிறது ஆய்வு

Pradeep GunasekaranBy : Pradeep Gunasekaran

  |  14 Feb 2020 4:26 AM GMT

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வியத்தகு அளவில் உயரும்போது, நிலைமை மிகவும் மோசமாகிவிடக்கூடும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களை இந்த கொடிய வைரஸ் தாக்கக்கூடும் என்று ஒரு உயர் தொற்று-நோய் விஞ்ஞானி எச்சரிக்கிறார்.

சீனாவில் வைரஸ் பரவுதல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பின் ஆலோசகரான ஈரா லாங்கினி கூறுகையில், அவரது மதிப்பீட்டின் படி தற்போதைய அதிகாரப்பூர்வ எண்ணிக்கையான 60,000 ஐ விட இறுதியில் பில்லியன் கணக்கான மக்களை இந்த நோய் தாக்கக்கூடும் என்கிறார்.

வைரஸ் அந்த அளவிற்கு பரவும் பட்சத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதிகளைத் தனிமைப்படுத்துவது உட்பட சீனாவின் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இருக்கும் என்று WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார். மற்ற நாடுகளும் முன்கூட்டியே தயாராக இருக்கவேண்டும் என்றார். நோயறிதல் முறைகளை விரிவுபடுத்திய பின்னர் வியாழக்கிழமை கிட்டத்தட்ட 15,000 பேர் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறிய பட்டுள்ளது.

ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரும் பொதுவாக இரண்டு முதல் மூன்று நபர்களுக்கு நோயை பரப்ப வாய்ப்புள்ளது என்று தரவு கூறுகிறது. நோயை கண்டறியும் முறை சரியாக இல்லாததாலும், 14 நாட்கள் வரை நோய் தோற்று இருக்கிறதென்றும் கண்டுபிடிப்பது கடினம்.

லண்டனில் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் நீல் பெர்குசன், சீனாவில் ஒவ்வொரு நாளும் 50,000 பேர் பாதிக்கப்படலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பேராசிரியரான கேப்ரியல் லியுங், தடுக்காமல் விட்டால் உலகின் மூன்றில் இரண்டு பங்கிற்கு மக்களுக்கு நோய் தாக்கும் என்று கூறியுள்ளார்.

Next Story