Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்திற்கு கொரோனாவிற்கான நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதா? புட்டு புட்டு வைக்கப்பட்ட ஊடகங்களின் சதி! உண்மை நிலை இதோ!

தமிழகத்திற்கு கொரோனாவிற்கான நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதா? புட்டு புட்டு வைக்கப்பட்ட ஊடகங்களின் சதி! உண்மை நிலை இதோ!

தமிழகத்திற்கு கொரோனாவிற்கான நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதா?  புட்டு புட்டு வைக்கப்பட்ட ஊடகங்களின் சதி! உண்மை நிலை இதோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 April 2020 9:52 AM GMT

கடந்த வாரம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு SDRMF (மாநில பேரிடர் மேலாண்மை நிதி) 11092 கோடி + PDRDG (வருவாய் இழப்பீடு மானியம்) 6195 கோடி ஒதுக்கியது.

தமிழகத்திற்கு 845 (510+335) கோடி.



இதை வைத்து திமுகவும் அதன் மீடியா கைக்கூலிகளும் "கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகம் இருந்தும் தமிழகத்திற்கு குறைவான நிதி" என பொய்ப்பிரச்சாரத்தை தொடங்கின.




கொரோனாவை எதிர்கொள்ள ஒதுக்கப்பட்டாலும் உண்மையில் கொரோனா நோயாளிகளையோ ஊரடங்கையோ அடிப்படையாகக் கொண்டு இது ஒதுக்கப்படவில்லை.

பேரிடர் மேலாண்மை நிதி நிதிஆணையத்தால் (Finance Commission) பரிந்துரைக்கப்படும் தொகை.



ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நிதி ஆணையம் மாநில அரசுகளுக்கு மத்திய வரி பங்கீடு, மத்திய அரசு திட்ட மானியம், பேரிடர் மேலாண்மை நிதி, வருவாய் இழப்பீடு மானியம் என ஒரு குறிப்பிட்ட பார்முலாவை வைத்து கணக்கிடும்.

SDRMF (முன்னர் SDRF) ஒவ்வொரு மாநிலத்திற்கும்

1. முன்றைய பேரிடர் செலவு

2. மக்கள் தொகை / பரப்பளவு

3. Disaster Risk Index Score - அதாவது பேரிடர் தாக்கம் & சாத்தியக்கூறு

என்ற அடிப்படையில் நிதி ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிதி ஒதுக்கப்படும்.

அதில் மத்திய அரசு பங்களிப்பு 75%, மாநில அரசு பங்களிப்பு 25% இருக்கும்.

கொரோனா தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட பிறகு எல்லா மாநிலங்களுக்கும் எதிர்கொள்ளும் நோக்கில், வருடாந்திர SDRMF நிதியிலிருந்து பாதி தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழத்திற்கான 1020 கோடி மத்திய அரசு ஒதுக்கீட்டில் 510 கோடியாக இந்த தவணை ஒதுக்கப்பட்டுள்ளது.




இப்பொழுது ஒதுக்கப்பட்ட தவணை

2020-21 SDRF - 50%

2020-21 PDRDG - (ஏப்ரல் மாதத்திற்கு)

ஒதுக்கப்பட்டுள்ளனவே தவிர எந்த மாநிலத்திற்கும் பாரபட்சமும் இல்லை.

இன்றுவரை கொரோனா தாக்கம் எல்லா மாநிலங்களிலும் ஒவ்வொரு நாளும் சரிவர கண்டறியப்படாத போக்கில் உயரும்போது இப்பொழுதே எந்த மாநிலத்திற்கும் ஒதுக்கப்படவில்லை. வரும் நாட்களில் சில மாநிலங்களில் கொரோனா தாக்கம் மற்ற மாநிலங்களை விட அதிகம் இருக்கலாம்.. அப்பொழுது தான் NDRFலிருந்தோ அல்லது சிறப்பு நிவாரண நிதி அம்மாநிலங்களுக்கு ஒதுக்கப்படலாம்.

திமுக இப்படிப்பட்ட பேரிடர் காலத்திலும் அரசியல் லாபத்திற்காக பொய்யுரை பரப்புவது வழக்கமானதாக மாறிவிட்டது. ..















Next Story