பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பரபரப்பு, பள்ளிகள் விடுமுறை!
பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பரபரப்பு, பள்ளிகள் விடுமுறை!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது கர்நாடக மாநிலத்தில் ஒருவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக மார்ச் ஒன்றாம் தேதி பெங்களூர் வந்த ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,
மார்ச் 5-ஆம் தேதியில் இருந்து தீவிர காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உயிருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என தெரிவித்தனர்.
கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் குழந்தை, மனைவி, டிரைவர், டிரைவரின் குடும்பத்தார் 3 பேர் ஆகியோரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர், இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் பெங்களூருவில் உள்ள அங்கன்வாடி மற்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு ஏழு நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.