Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை தொழில் துறை எதிர்கொள்ள உதவுவதற்கு தொழில் தடைகாப்பு தளம் - 40 நாடுகளை சென்றடைந்த சேவை!

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை தொழில் துறை எதிர்கொள்ள உதவுவதற்கு தொழில் தடைகாப்பு தளம் - 40 நாடுகளை சென்றடைந்த சேவை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 March 2020 9:24 AM IST

இந்தியாவின் தொழில் வணிக அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், நாட்டின் தேசிய முதலீட்டு மேம்பாட்டு & ஊக்குவிப்பு ஏஜென்சியான இன்வெஸ்ட் இந்தியா அமைப்பு - இன்வெஸ்ட் இந்தியா பிசினஸ் இம்யூனிட்டி என்ற களத்தை (தொழில் தடைகாப்பு தளம் வசதியை) - தொடங்கியுள்ளது. இன்வெஸ்ட் இந்தியா இணையதளத்தில் இதற்கான தளம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவிட் - 19 தாக்கத்திற்கு இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை தொழில் வணிக முதலாளிகள் மற்றும் முதலீட்டாளர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கான விரிவான ஆதார மையமாக இருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்த தொடர்ச்சியான, அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை இதில் உடனுக்குடன் சேர்க்கப்படும். மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் பற்றிய புதிய தகவல்கள் இதில் இடம் பெற்றிருக்கும். சந்தேகங்களுக்கு பதில் அளிக்கவும், விசாரணைகள் இருந்தால் அவற்றைத் தீர்த்து வைக்கவும் இமெயில் மற்றும் வாட்ஸப் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தொழில் தடங்கல் நீக்கல் தளம் (BIP) தொழில் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தலுக்கு உதவக் கூடியதாக, வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் தினமும் 24 மணி நேரமும் இயங்கக் கூடியதாகவும் இருக்கும். மூத்த நிபுணர்கள், கூடிய விரைவில் பதில்கள் அளிப்பதற்கு இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.எஸ்.எம்.இ.கள் (MSME) தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கு சிட்பியுடன் (SIDBI) இன்வெஸ்ட் இந்தியா அமைப்பு கை கோர்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் - 19 காரணமாக தொடர்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், தொழில் துறையில் இதன் தாக்கம் குறித்து தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. அரசு, தன்னுடைய கடமையாக, தொழில் துறைக்கென உரிய காலத்தில் வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் மூலம் தங்களுக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தொழில்களில் ஈடுபட்டுள்ள முதலாளிகள் புரிந்து கொள்ள முயற்சித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக தொழில் துறையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில், இந்தத் தளம் 2020 மார்ச் 21 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

கோவிட் - 19 பரிசோதனை நடைபெறும் இடங்கள், விசேஷ அனுமதிகள் மற்றும் அந்தந்தப் பகுதிக்கான தகவல்கள் போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்து, அடிக்கடி எழும் கேள்விகள் மற்றும் அவற்றுக்கான பதில்களும் இந்தத் தளத்தில் இடம் பெற்றுள்ளன. பணியாளர் வாகனங்களை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தல், மாற்று மார்க்கெட்களில் ஆர்டர்கள் அளித்தல், கை விரல் ரேகைப் பதிவு மூலம் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் முறையை நிறுத்தி வைத்தது, மருத்துவ பணிக் குழுக்கள் நியமித்தது, பயிற்சியாளர்களை வீட்டுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டது, வணிகத்தைத் தொடர்வதற்கான திட்டம், பார்வையாளர்கள் வருவதைத் தடுத்தல், விமான பயணத்தை நிறுத்தி வைத்தது, காணொலி காட்சி மற்றும் டெலிகான்பரன்ஸ் முறைகளைப் பயன்படுத்துவது, ஆன்லைன் தீர்வுகள் உருவாக்குவது மற்றும் இதர தனித்துவமான முன்முயற்சிகள் போன்று இந்தியாவில் முன்னணி நிறுவனங்கள் அமல்படுத்தியுள்ள நடைமுறைகள் இதில் பிரதானமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மக்கள் வீடுகளில் இருந்தபடியே, கோவிட் 19 குறித்த அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு, இந்தத் தொழில் தடைகாப்புத் தளம் உதவியாக இருக்கும். இதன்மூலம் வசதிகளை உங்கள் இல்லத்திற்கே கொண்டு வந்து சேர்ப்பதை இன்வெஸ்ட் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

`` முன்னெப்போதும் இல்லாத சவால்களை கோவிட் - 19 உருவாக்கியுள்ள நிலையில், நாம் அனைவரும் ஒன்றுபடுவதற்கான தளமாக இது உள்ளது. வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில், குறிப்பாக தொழில் துறையினரின் தொழிலைத் தொடர்வது குறித்த கேள்விகளுக்குப் பதில்கள் மற்றும் விளக்கங்கள் பெறுவதற்கு உதவியளிக்க ஒரு குழுவினர் உழைத்து வருகின்றனர். பொருள்களை வைத்திருப்போர், தேவைப்படுவோர், புதுமை சிந்தனையாளர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களை ஒரே தளத்தில் சந்திக்க வைத்து, தங்கள் தீர்வுகளை முன்வைக்க ஏற்பாடு செய்து தரப்படுகிறது. கடந்த 48 மணி நேரங்களில் 40 நாடுகளில் இருந்து 30,000க்கும் மேற்பட்டோர் இந்தத் தளத்தைப் பார்த்துள்ளனர். நமது இணையம் 50,000 முறைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒவ்வொரு முறையும் 5 நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளது. நேற்று முதல், தொழில் தொடர்ச்சி மற்றும் தடங்கல் இல்லாதிருப்பது தொடர்பாக 200க்கும் மேற்பட்ட வணிகக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில் நமது குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற காலக்கட்டங்களில் கையாள வேண்டிய தொழில் உத்திகள் பற்றி நிபுணர்களின் கருத்துகளை அறிந்து கொள்ளும் தளமாகவும் இது உள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News