Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 4,39,947 ஆக அதிகரிப்பு - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையை விட 1,80,390 அதிகம்!

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 4,39,947 ஆக அதிகரிப்பு - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையை விட 1,80,390 அதிகம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 July 2020 1:47 PM GMT

இந்தியாவில் கொரோனா தொடர்பான சிகிச்சைகளுக்காக மருத்துவ உள்கட்டமைப்பு போதுமான அளவிலும், சிறப்பாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் உதவி, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் வெண்டிலேட்டர்கள் உட்பட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. 2020 ஜூலை 7 நிலவரப்படி, மிகக் குறைந்த அளவில் அறிகுறிகள் உள்ளவர்கள் முதல் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வரை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 1201 மருத்துவமனைகளும், 2611 மருத்துவ கவனிப்பு மையங்களும், 9,909 கொவிட் கவனிப்பு மையங்களும் உள்ளன. இத்தகைய மருத்துவ வசதிகளால், குணமடைவோர் விகிதம் சீராக மேம்பட்டுள்ளதுடன், இறப்பவர் விகிதமும் குறைந்து வருகிறது.

துவக்கத்திலேயே கொரோனா நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து வருவதால் குணமடைவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 15,515 கொரோனா நோயாளிகள் குணமாகியுள்ளனர். இது வரை 4,39,947 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா நோயாளிகள் குணமடையும் விகிதம் 61.13 விழுக்காட்டை இன்று எட்டியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, கொரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையை விட 1,80,390 அதிகமாகும்.. தற்போது 2,59,557 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

கொரோனாவை கண்டறியும் பரிசோதனைச் சாலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் கூடுதலான மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,41,430 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதனையும் சேர்த்து தேசிய அளவில் கொரோனா தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் மொத்தம் 1,02,11,092 ஆகும்.

தற்போது 1115, கொரோனா பரிசோதனை மையங்கள் நமது நாட்டில் உள்ளன. இதில் அரசு பரிசோதனை மையங்கள் 793, தனியார் பரிசோதனை மையங்கள் 322அடங்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News