Top
Kathir News
Begin typing your search above and press return to search.

ஒலிம்பிக்கால் மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கை செய்யும் உலக சுகாதார அமைப்பு.!

ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒலிம்பிக்கால் மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கை செய்யும் உலக சுகாதார அமைப்பு.!

ThangaveluBy : Thangavelu

  |  22 July 2021 1:02 AM GMT

ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் கூறியதாவது: கொரோனா தொற்று பாதிப்பு விபரத்தின் மூலமாக ஒலிம்பிக் போட்டியில் வைரஸ் தொற்றை குறைத்து மதிப்பிட முடியாது. கொரோனா வைரஸ் பிரச்னையை முற்றிலுமாக ஒழிப்பது என்பது முடியாத விஷயம். விளையாட்டு வீரர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம்.


மேலும், உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசியில் 75 சதவீதத்தை, 10 நாடுகள் மட்டுமே பங்கு பிரித்துக் கொண்டுள்ளது. உலகின் பல்வேறு இடங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாட்டை விட அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாட்டை மனிதஇனம் விரைவில் சந்திக்கும்'' என்றார்.

Next Story