கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பல மடங்காக பரவுகிறது.. உலக சுகாதார நிறுவனம் வேதனை..
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பல மடங்காக பரவுகிறது.. உலக சுகாதார நிறுவனம் வேதனை..

ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனம் நேற்று செய்தியாளர்களுடன் வீடியோ சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
இதில் உலக சுகாதார நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் பேசுகையில் :-
''கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி 4-வது மாதத்திற்குள் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் வைரஸ் மிக தீவிரமாக உலகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவும் நிலையால் நான் மிகவும் கவலைப்படுகிறேன்.
வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் இரண்டு மடங்காகியுள்ளது. அடுத்து வரும் சில நாட்களில் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிவிடுவது மட்டுமல்லாமல் உயிரிழப்பும் 50 ஆயிரத்தை தொட்டுவிடும் என கூறப்படுகிறது.
இதுவரை இந்த வைரஸ் அதிக அளவில் பரவாத ஆப்ரிக்கா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் கூட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தபோதும், உலக அளவிலான பாதிப்பால் அந்த நாடுகளின் சமூக- பொருளாதாரத்திலும் இது தீவிர விளைவுகளை ஏற்படுத்துகிறது.
மேற்கண்ட நாடுகளில் கொரோனாவை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் தேவையான உபகரணங்கள் உள்ளதா என்பது கேள்விக் குறியாக உள்ளதாகவும் அவர் வேதனையுடன் கூறினார்.