Kathir News
Begin typing your search above and press return to search.

போன் செய்தால் வீட்டிற்கே வந்து கொரோனா பரிசோதனை - அசத்தும் அரசு.!

போன் செய்தால் வீட்டிற்கே வந்து கொரோனா பரிசோதனை - அசத்தும் அரசு.!

போன் செய்தால் வீட்டிற்கே வந்து கொரோனா  பரிசோதனை - அசத்தும் அரசு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 April 2020 4:02 AM GMT

காரைக்காலில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்தே கொரோனா வைரஸ் பரிசோதனை குறித்து அறிந்துகொள்ளும் வகையில் இணையதளம் மூலம் புதிய முறையை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தப்பட்டுத்தி உள்ளது.

இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் செய்திகளிடம் பேசிய போது, காரைக்காலில் உள்ள மக்கள் தங்களுக்கு சளி, இருமல் போன்ற கொரோனா குறித்த அறிகுறிகள் உள்ளதா அதேபோல் சமீபத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டீர்களா போன்றவை இணையதளத்தில் கேள்விகளாக கேட்கப்பட்டு இருக்கும் என்றும் அதை பூர்த்தி செய்து அனுப்பிய 24மணி நேரத்தில் கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்கள் தங்களின் வீடுகளில் வந்து மருத்துவ பரிசோதனை செய்ய தயாராக உள்ளனர் என தெரிவித்த அவர் Karaikal.gov.in/covid19 என்ற இணையத்தில் முகவரியில் தங்களின் விவரங்களை அதில் கேட்கப்பட்டு இருக்கும் கேள்விகளை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் மேலும் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்றார்.

Next Story