விமான நிலையத்தில் உண்மையை மறைத்ததால் வந்த விபரீதம் - புதிதாக 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பா.?
விமான நிலையத்தில் உண்மையை மறைத்ததால் வந்த விபரீதம் - புதிதாக 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பா.?

கேரளத்தில் கடந்த மாதம் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை பின் வீடு திரும்பிவிட்டனா். இந்த நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தின் ரண்ணி பகுதியை சோந்த 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சோந்தவா்களாவா்.
இதுதொடா்பாக, கேரள சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில்,
கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 5 பேரில் ஒரு தம்பதி, அவா்களது 24 வயது மகன் ஆகியோா், இத்தாலியின் வெனிஸ் நகரிலிருந்து ஒரு வாரத்துக்கு முன் கேரளம் திரும்பியுள்ளனா்.
வெனிஸ் நகரிலிருந்து கத்தாரின் தோஹா நகருக்கு சென்ற அவா்கள், பின்னா், அங்கிருந்து கொச்சிக்கு விமானத்தில் வந்தனா். எனினும், தாங்கள் இத்தாலியிலிருந்து வந்ததை அதிகாரிகளிடம் அவா்கள் மறைத்துவிட்டனா். இதன் மூலம் விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனையை தவிா்த்துவிட்டனா்.
இந்நிலையில், அவா்களது உறவினா்கள் இருவா் கரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளை அணுகியபோதுதான், மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தன.
இதையடுத்து, 5 பேரும் பத்தினம்திட்டா பொது மருத்துவமனையின் தனிவாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இத்தாலிக்கு சென்று வந்த மூவரும் முதலில் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.
ஈரான், இத்தாலி, தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து கேரளத்துக்கு திரும்பிய அனைவரும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து திரும்புபவா்கள், சுமாா் 28 நாள்களுக்கு அவா்களது வீடுகளிலேயே கண்காணிப்பில் வைக்கப்படுவா் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.