இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கேரளா மாநிலத்தில்தான் முதன்முதலில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் கொரோனா தாக்குதல் ஏற்பட்டது.
தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.