சென்னை மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி!
சென்னை மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி!

சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் இருந்து பரவி உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ். இதனால் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.இந்தியாவில் 4ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 102 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரசால் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் இடையே சென்னையில் உள்ள மேற்கு மாம்பலத்தில் இருக்கும் பொது சுகாதார மையத்தில் வேலை பார்த்துவரும் மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இவரை மதுரவாயில் அடுத்த வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சென்ற மார்ச் மாதம் 16-ஆம் தேதி வரை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.