குழந்தை உட்பட ஒரே குடும்பத்தில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி, தெலங்கானாவில் நடந்த சோக சம்பவம்.!
குழந்தை உட்பட ஒரே குடும்பத்தில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி, தெலங்கானாவில் நடந்த சோக சம்பவம்.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இந்தச் செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தை பிறந்து பத்து மாதம் ஆகியுள்ளது. பின்னர் அவர்களுடன் தொடர்பில் இருந்த 24 பேரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இவர்களுக்கு பரிசோதனையின் முடிவில் எவருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என தெரியவந்துள்ளது. இருந்தாலும் அவர்களை நிஜாமியா அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 17 பேரையும் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அந்தப் பகுதி முழுவதும் சில் வைக்கப்பட்டுள்ளது.