இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இரண்டாவது உயிர் பலி!
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இரண்டாவது உயிர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் டெல்லியை சேர்ந்த 68 வயது பெரியவர், நேற்று இரவு பலியானார். இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இரண்டாவது உயிர் பலி.
உலகை தற்போது அச்சுறுத்தி வரும் 'கொரோனா', 116 நாட்டிற்கு பரவி உள்ளது. இந்தியாவிலும் பரவி 81 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முகமது உசைன் சித்திக். இவர் கடந்த 10ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்த தருணத்தில் டெல்லியை சேர்ந்த 68 வயது பெரியவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய மகனுக்கும், கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
68 வயது பெரியவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு உயிரிழந்தார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதை மத்திய சுகாதாரத் துறையும், டெல்லி அரசும் உறுதி செய்தது . இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இரண்டாவது உயிர் பலி.