Kathir News
Begin typing your search above and press return to search.

மேகாலயாவையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்

மேகாலயாவையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்

மேகாலயாவையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 April 2020 9:05 AM GMT

மேகாலயா மாநிலத்தில் முதல் தடவையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

இதனால் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 358 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் மேகாலயா மாநிலத்தில் எவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. தற்போது நேற்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இந்த மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை நீடிக்க முடிவ எடுத்துள்ளது.

இவரை அந்த மாநிலத்தில் ஷில்லாங்கின் பெத்தானி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டன. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டன. ஆனால் இவர் எந்த வெளிநாட்டுப் பயணமும் செய்யவில்லை என்பதை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வரை வடகிழக்கு மாநிலம் சிக்கிம் மட்டும் தான் கொரோனா வைரஸ் பரவாமல் உள்ளது.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2520998

Next Story