கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவருக்கும் பாதிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவருக்கும் பாதிப்பு!

கொரோனா தொற்றால் இதுவரை இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது.
இதில் முதலில் கர்நாடகாவை சேர்ந்த முகமது ஹுசைன் சித்திக் 76 வயது பெரியவர் பலியானார். இவர் சவுதி அரேபியாவுக்கு சென்று அண்மையில் இந்தியாவுக்கு வந்தவர். அதன் பிறகு இவருக்கு காய்ச்சல் இருமல் சளி போன்ற பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை பரிசோதனை செய்தனர். ஆனால் பரிசோதனையின் முடிவுகள் வரும் முன்பே சென்ற 10 ஆம் தேதி இறந்துவிட்டார். இதன் பிறகுதான் கொரோனா தொற்று அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த தருணத்தில் பெரியவரை பரிசோதனை செய்த மருத்துவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். பெரியவருக்கு சிகிச்சை கொடுத்த 63 பேரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தொற்றால் டெல்லியை சேர்ந்த 68 வயது பெரியவர் இரண்டாவதாக பலியானார்.