இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிய டெல்லி இஸ்லாமியர்கள் - தடையை மீறி இன்றும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்!
இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிய டெல்லி இஸ்லாமியர்கள் - தடையை மீறி இன்றும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்!

நாடு முழுவதும் இன்று மக்களின் சுய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தில்லியில் உள்ள ஷாஹீன்பாக் "போராட்டக்காரர்கள்" அதனை ஏற்க மறுத்து வழக்கம் போல தங்களது போராட்டத்தை இன்றும் தொடர உள்ளார்கள்.
கொரோனா தொற்று சர்வதேச அளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்தது இந்தியாவிலும் இது பரவத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுவருகின்றது. அதன் தொடர்ச்சியாகப் பிரதமர் இன்று மக்கள் சுய ஊரடங்கு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நடவடிக்கையின் காரணமாக இன்று இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களை சுய ஊரடங்கு உத்தரவினை கடைப்பிடிக்கின்றனர்.
இந்த நிலையில் தில்லியில் உள்ள ஷாஹீன்பாக் "போராட்டக்காரர்கள்" அதனை ஏற்க மறுத்து வழக்கம் போல தங்களது போராட்டத்தை இன்றும் தொடர உள்ளார்கள்.தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொண்டு விட்டார்களாம். அரசாங்கம் போடும் எந்த உத்தரவும் எங்களை கட்டுப்படுத்தாது என்ற செய்தியை இவர்கள் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டே உள்ளார்கள்.
அதுவும் கோரோனா வைரஸ் தாக்கம் பரவத் தொடங்கியுள்ள நிலையில் இப்படி கும்பலாக சேர்ந்து கொண்டு நாடே ஒரு திசையில் இருக்க இவர்கள் மட்டும் எதிர் திசையில் இருப்பது மிக மிகத் தவறான முன்னுதாரணம். இவர்களில் யாராவது ஒருவருக்கு, ஒரே ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்படுமானால் அதனால் வரும் பின்விளைவுகள் மிகுந்த அபாயகரமானவை. இத்தகைய போக்குகள் தொடர்வது தேசிய ஆபத்து.