பேருந்தில் பயணம் செய்த கொரோனா பாதித்த நபர் - மீண்டும் இந்தியாவில் பீதியை கிளப்பிய சம்பவம்!
பேருந்தில் பயணம் செய்த கொரோனா பாதித்த நபர் - மீண்டும் இந்தியாவில் பீதியை கிளப்பிய சம்பவம்!

புதுதில்லியில் ஒருவருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியைச் சேர்ந்தவர், இத்தாலியில் பயணம் செய்தவர். தெலங்கானாவைச் சேர்ந்தவர், துபாயில் பயணம் செய்தவர். இவரது பயண விவரங்கள் மேலும் உறுதி செய்யப்பட வேண்டி உள்ள நிலையில், பெங்களூரை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருந்து ஹைதராபாத்திற்கு பேருந்தில் வந்த அந்த நபருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தியதில் உறுதி செய்யப்பட்டதாக தெலுங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார். அவரையும் அவருடன் பேருந்தில் பயணம் செய்தவர்களையும் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
முன்னர் கொரோனா உறுதிபடுத்தப்பட்ட இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. இவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.