உச்சக்கட்ட கண்காணிப்பில் சென்னை: 9 இடங்களில் கொரோனா வைரஸ் எச்சரிக்கை!
உச்சக்கட்ட கண்காணிப்பில் சென்னை: 9 இடங்களில் கொரோனா வைரஸ் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் 34,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏழுலட்சத்திற்கு அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் வேகமாக தொற்று பரவி வருகிறது.
இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் எத்தனை பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று கணக்கெடுப்பு நடைபெற்றது. 11 மாவட்டங்களில் வீடு வீடாக சுகாதாரப் பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் லட்சத்துக்கும் மேல் உள்ள வீடுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் சளி, இருமல், காய்ச்சல் யாருக்காவது இருக்கிறதா எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னையில் இதற்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்: அரும்பாக்கம் புரசைவாக்கம் பகுதியில் 5 பேருக்கும், தேனாம்பேட்டை பகுதியில் ஒருவருக்கும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் பகுதியில் ஐந்து பேருக்கும், போரூரில் இரண்டு பேருக்கும், ஆலந்தூர் மற்றும் கோட்டூர்புரம் பகுதியில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது சிகிக்சையில் இருந்து வருகின்றார்.
இந்த 9 இடங்களில் இருக்கும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவு விடுக்கப்பட்டுள்ளது.