Kathir News
Begin typing your search above and press return to search.

இன்று மாலை 5 மணிக்கு களத்தில் இறங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி - ராஜீவ்காந்தி மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனைகளில் அதிரடி ஆய்வு!

X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 March 2020 2:49 PM IST

சென்னை அரசு மருத்துவமனைகளில் மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்த உள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா தனி வார்டுகளை முதல்வர் ஆய்வு மேற்கொள்வார், டி.எம்.எஸ்-ல் கட்டுப்பாட்டு மையத்தையும் பார்வையிடுகிறார்.

முன்னதாக தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,508 ஆய்வக டெக்னீசியன்களை நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காலியிடங்களை நிரப்பவும், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்படும் நபர்கள் 3 நாளில் பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிதாக 200 ஆம்புலன்ஸ்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News