Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க அமைச்சர்கள் குறித்து அவதூறு பதிவு - தி.மு.க பிரமுகர் சொன்னதாலே அப்படி செய்தேன் என்று குற்றவாளி வாக்குமூலம்!

அ.தி.மு.க அமைச்சர்கள் குறித்து அவதூறு பதிவு - தி.மு.க பிரமுகர் சொன்னதாலே அப்படி செய்தேன் என்று குற்றவாளி வாக்குமூலம்!

அ.தி.மு.க அமைச்சர்கள் குறித்து அவதூறு பதிவு - தி.மு.க பிரமுகர் சொன்னதாலே அப்படி செய்தேன் என்று குற்றவாளி வாக்குமூலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 April 2020 6:20 AM GMT

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர், ஆகியோர் குறித்தும் சோஷியல் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய இளைஞரை கோவை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் தி.மு.க பிரமுகர்தான் இப்படி முதல்வரையும், அமைச்சர்களையும் மிரட்ட சொன்னார் என்று இளைஞரின் வாக்குமூலத்தை வைத்து சம்பந்தப்பட்ட தி.மு.க பிரமுகரை கைது செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்ட அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவில் மாவட்ட துணை செயலாளர் ரியாஸ்கான் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹலோ ஆப் எனும் செயலியில் "கருப்பு குதிரை" என்ற பெயரில் அவதூறு செய்தி பரப்பப்பட்டு வந்ததை ஆதாரத்துடன், கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சமர்ப்பித்துள்ளார்.

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், ஆட்சியாளர்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கிலும் பதிவுகள் போட்டுவரும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் ரியாஸ்கான் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அந்த நபர் யார் என விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில் அந்த நபர், சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 22 வயதான இவர் வெப் டிசைனர் சுதர்சன் என்பது தெரிய வந்துள்ளது. பதிவுகள் ஏன் போடப்பட்டன என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்திய போது, தனது நண்பர் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும், அவர் சொன்னதாலேயே அப்படி பதிவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுதர்சன் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.. தற்போது அந்த திமுக பிரமுகர் யார், அவரை கைது செய்வது குறித்த அடுத்தடுத்த நடவடிக்கைகளில் கோவை போலீசார் இறங்கி உள்ளனர்





Next Story