சீனாவில் இருந்து கொரியாவுக்கு குடியேறிய கொரோனா! 4 ஆயிரம் பேர் கடும் அவதி!
சீனாவில் இருந்து கொரியாவுக்கு குடியேறிய கொரோனா! 4 ஆயிரம் பேர் கடும் அவதி!

சீனாவில் கடந்த ஜனவரி முதல் வாரம் முதல் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு அந்த நாட்டுக்குள் மட்டுமன்றி அந்த நாட்டுக்கு சென்று வருவோரிடையே வேகமாக பரவத் தொடங்கியது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,912என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நோய் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து குணமாகி திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சீன அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில், சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியாவில் வேகமாக பரவி வருவதாகவும்,
தென் கொரியாவில் நேற்று மட்டும் புதிதாக 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்,கொரோனா வைரசால் தாக்கப்பட்டு, அவதிப்பட்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4000 ஆக உயர்ந்துள்ளதாகவும், இது வரை இந்த நோய்க்கு 22 பேர் பலியானதாகவும் தென்கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.