Kathir News
Begin typing your search above and press return to search.

கொடுமையான நேரத்திலும் குடிமகன்களுக்கு சரக்கு ஊற்றிக் கொடுத்த பினராயி அரசுக்கு நீதிமன்றம் கொட்டு.. மீண்டும் தடை..

கொடுமையான நேரத்திலும் குடிமகன்களுக்கு சரக்கு ஊற்றிக் கொடுத்த பினராயி அரசுக்கு நீதிமன்றம் கொட்டு.. மீண்டும் தடை..

கொடுமையான நேரத்திலும் குடிமகன்களுக்கு சரக்கு ஊற்றிக் கொடுத்த பினராயி அரசுக்கு நீதிமன்றம் கொட்டு.. மீண்டும் தடை..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 April 2020 11:49 AM GMT

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், சமூக தனிமைப்படுத்தலை பின்பற்ற 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களைப் போலவே கேரளாவும் மதுக் கடைகளை மூடினாலும் வேண்டா வெறுப்பாகவே மூடியது. அதுவும் தாமதமாக மூடியது. மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால், மதுப் பழக்கத்துக்கு அடிமையான 3 பேர் மது கிடைக்கததால் கேரளாவில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தன.

இதையடுத்து கேரள மாநில அரசு திங்கள்கிழமை இரவு ஓர் அவசர உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஏதேனும் ஒரு அரசு மருத்துவமனைக்கு சென்று மது குடிப்பது உடல்நிலைக்கு அவசியமானது என மருத்துவர்களின் அனுமதிக் கடிதத்துடன் வந்து கலால் வரி அலுவலகத்தில் மதுவை வாங்கிக்கொள்ளலாம்" எனத் தெரிவித்தது.

கேரள அரசின் முடிவுக்கு கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நேற்று கறுப்பு புதினத்தை கடைப்பிடித்தனர்.

மேலும் கூட்டமைப்பினர் சார்பில் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள உயர் நீதிமன்றத்தில் மது விற்பனைக்கு தடை கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். ஜெயசங்கரன் நம்பியார், ஷாஜி பி சாலே ஆகியோர் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம், "மீள் அறிகுறிகள் இருக்கும் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மது வழங்குவதால் அவர்கள் குணமடைந்துவிடுவார்களா? அறிவியல் பூர்வமாக இதற்கு ஏதேனும் விளக்கம் ஏதும் இருக்கிறதா? இது அறிவியல் பூர்வமான முடிவா? என்று கேட்டதுடன் சிறப்பு அனுமதி மூலம் மது வழங்கும் கேரள அரசின் உத்தரவுக்குத் தடை விதிப்பதாக கூறினர். மேலும் அடுத்த 3 வாரங்களுக்குள் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்'' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News