Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா பாதிப்பின் பிடியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை பாதுகாத்துள்ளோம்: பிரதமர் மோடி பேச்சு.! #Covid19 #PMModi #Varanasi

கொரோனா பாதிப்பின் பிடியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை பாதுகாத்துள்ளோம்: பிரதமர் மோடி பேச்சு.! #Covid19 #PMModi #Varanasi

கொரோனா பாதிப்பின் பிடியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை பாதுகாத்துள்ளோம்: பிரதமர் மோடி பேச்சு.! #Covid19 #PMModi #Varanasi

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 July 2020 2:22 PM GMT

கொரோனா பாதிப்பு ஏற்படுத்தியுள்ள காலகட்டத்தில் அமெரிக்காவைவிட அதிகம் மக்கள் தொகை அடர்த்தி கொண்ட இந்தியா, மக்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட பெறாமல் அவர்களுக்கு எல்லாவித சேவைகளையும் செய்து வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.

கொரோனோ பாதிப்பு நிவாரண உதவிகள் வழங்கி வரும் வாரணாசியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாகக் கலந்துரையாடினார்.

அப்போது அவர், கொரோனா பெருந்தொற்று நிலவும் காலத்தின் போதும் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் இருக்கும், புனிதத்துவம் வாய்ந்த, அருள் நிறைந்த வாரணாசி நகரத்தின் மக்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

வாரணாசி நகரம் அன்னபூரணி அன்னை, பாபா விஸ்வநாத் ஆகியோரின் பூரண அருள் பெற்றது என்பதால் காசி நகரத்தில் எவருமே பசியுடன் தூங்க மாட்டார்கள் என்ற பழைய நம்பிக்கை ஒன்று உண்டு என்று பிரதமர் கூறினார். இந்த நேரத்தில் ஏழை மக்களுக்கு சேவை செய்யும் ஒரு கருவியாக நம்மை கடவுள் இயக்குகிறார் என்பது, நாம் பெற்ற பெரும் பேறாகும் என்றும் அவர் கூறினார்.

இந்தப் புனித நகரத்தில் பல்வேறு மத ரீதியான செயல்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் வாரணாசி மக்கள் மற்ற எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்றும், ஏழை மக்களுக்கும், தேவைப்படும் நிலையில் உள்ள மக்களுக்கும், உணவு, மருந்துப் பொருள் போன்றவற்றை தொடர்ந்து வழங்கி ஆதரவு அளித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

மிகக்குறுகிய காலத்திலேயே சமூக சமையற்கூடங்களை அமைத்து, உணவுக்கான உதவித் தொடர்பு எண்கள் கொண்ட விரிவான இணைப்பை உருவாக்கியது, பல்வேறு உதவித் தொடர்பு எண்களை ஏற்படுத்தியது, அறிவியல்பூர்வமான தகவல் புள்ளிவிபரங்களின் உதவியை எடுத்துக் கொள்வது, வாரணாசி ஸ்மார்ட் சிட்டியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது ஆகியவற்றின் மூலமாக ஒவ்வொருவரும் எல்லா நிலைகளிலும் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் முழுத் திறன் பெற்றவர்கள் என்று பிரதமர் கூறினார்.

சேவை செய்பவர்கள், சேவையின் பலன்களை எதிர்பார்ப்பதில்லை என்றும், அவர்கள் தங்களின் தன்னலமற்ற சேவையை அல்லும் பகலும் தொடர்வார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார். இதுகுறித்த மகான் கபீர் தாஸின் பாடல் ஒன்றையும் அவர் மேற்கோள் காட்டினார்.

மிக அதிகமான மக்கள் தொகை மற்றும் இதர சவால்கள் உள்ள இந்தியா, இந்த பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் திறன்கள் கொண்டதா என்பது குறித்து பல நிபுணர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர் என்று பிரதமர் கூறினார். அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தத் தொற்று கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும் என்ற அச்சம், மாநில மக்களின் ஒத்துழைப்பு மற்றும் கடின உழைப்பின் காரணமாக அகற்றப்பட்டுவிட்டது என்று கூறினார்.

உ.பி. மாநிலத்திற்கு நிகரான மக்கள் தொகை கொண்ட பிரேசிலில் கரோனா பாதிப்பால் 65 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், ஆனால் உ.பி.யில் பலியானோர் எண்ணிக்கை 800 மட்டுமே, இந்த மாநிலத்தில் அரசின் நடவடிக்கையால் ஆயிரக்கணக்கானோரின் உயிரை பாதுகாத்துள்ளோம் என பிரதமர் மோடி கூறினார்.

தேவைப்படுகின்ற மக்களுக்கு பல்வேறு வசதிகளை மத்திய அரசு செய்து தருகின்றது என்று கூறிய பிரதமர், இந்தத் திட்டங்கள் மூலமாக 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று கூறினார். இந்தத் திட்டங்களின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் மட்டுமல்லாமல், இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களும் வழங்கப்படுகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.

அமெரிக்காவைப் போல இரண்டு மடங்குக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா, மக்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட பெறாமல் அவர்களுக்கு எல்லாவித சேவைகளையும் செய்து வருகிறது என்று குறிப்பிட்ட மோடி, இந்தத் திட்டம் நவம்பர் மாத இறுதி வரை அதாவது தீபாவளி காலம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. மற்றும் இதர திட்டங்கள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News