Kathir News
Begin typing your search above and press return to search.

நியூயார்க் நகரில் இறந்தவர்களின் உடல்கள் தனி தீவில் புதைப்பு, அடக்கப்பணிகள் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பு

நியூயார்க் நகரில் இறந்தவர்களின் உடல்கள் தனி தீவில் புதைப்பு, அடக்கப்பணிகள் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பு

நியூயார்க் நகரில் இறந்தவர்களின் உடல்கள் தனி தீவில் புதைப்பு, அடக்கப்பணிகள் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 April 2020 3:11 AM GMT

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் மட்டும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இத்தாலியை மிஞ்சியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்ற வியாழக்கிழமையன்று பதிவான 10,000 கிருமித் தொற்று சம்பவங்களை அடுத்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் மட்டும் 159,937 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினில் பாதிக்கப்பட்ட 153,000 பேரையும் இத்தாலியில் பாதிக்கப்பட்ட 143,000 பேரையும் விட நியூயார்க் எனும் ஒரேயொரு நகரத்தில் பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒட்டுமொத்த அமெரிக்காவில் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 ஆயிரத்து 513 பேர் இறந்தனர்.

இதற்கிடையே, கிருமித் தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் நகரில் இடமில்லாமல் நியூயார்க் அருகே உள்ள தீவில் ஒட்டுமொத்தமாகப் ஒரே இடத்தில் வைத்து புதைக்கப்படுகின்றன.

ஹார்ட் தீவிலுள்ள பிராங்க்ஸ் எனும் பகுதியில் நீண்ட பள்ளங்கள் எடுக்கப்பட்டு ஏராளமான பிணங்கள் ஒரே பள்ளத்தில் புதைக்கப்படுகின்றன. இறுதி சடங்குகளுக்கு இறந்தவர்களின் மகன்கள் அல்லது வாரிசுகள் கூட எவரும் வருவதில்லை என கூறுகின்றனர்.

வாரத்திற்கு ஒரு முறை இயங்கி வந்த இந்த இடத்தில், தற்போது வாரத்தில் ஐந்து நாட்கள் சடலங்களைப் புதைக்கும் பணி நடக்கிறது. முன்பு சடலங்களைப் புதைக்கும் பணியைச் சிறைக் கைதிகள் செய்து வந்தனர்.

ஆனால் கிருமித் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால், உடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வருவதால் தற்போது சடலங்களைப் புதைக்கும் பணியை நியூயார்க் மாநகராட்சி ஒப்பந்தக்காரர்களிடம் கொடுத்துள்ளதாக மாநகர மேயர் பில் டி ப்லாசியோ கூறியுள்ளார்.

https://www.bbc.com/news/world-us-canada-52241221

Next Story