Kathir News
Begin typing your search above and press return to search.

தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா மாவட்டமாக விழுப்புரம் மாறியது - சட்டதுறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதங்கம்

தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா மாவட்டமாக விழுப்புரம் மாறியது - சட்டதுறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதங்கம்

தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா மாவட்டமாக விழுப்புரம் மாறியது - சட்டதுறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதங்கம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 April 2020 5:38 AM GMT

தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா மாவட்டமாக விழுப்புரம் மாறியது சட்டதுறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

விழுப்புரம் மாவட்ட கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சட்டதுறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது விழுப்புரம் மாவட்டத்தில் தப்லிக் மாநாட்டிற்கு சென்றவர்களால் தான் இந்த அளவிற்கு நோயின் பாதிப்பு அதிகரித்து கொரோனா மாவட்டமகா விழுப்புரம் மாறிப்போனது இதை என்ன வென்று சொல்வது என்றே தெரியவில்லை

தப்லிக் மாநாட்டுக்கு செல்லாமல் இருந்து இருந்தால் விழுப்புரம் கொரோனா இல்லாத மாவட்டமாக விழுப்புரம் இருந்திருக்கும் என்பதை மறுப்பதிற்கு இல்லை

அரசின் உத்தரவுகளை முழுமையக அமல்படுத்த வேண்டும் எவரிடமும் பரிவு காட்ட கூடாது நோய் தொற்று அதிகமாக இருப்பதால் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம்

தனிமை படுத்த பட்டவர்கள் வீட்டை வீட்டை விட்டு வெளியே வராமல் பார்த்து கொள்ள வேண்டும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளது

தேசிய ஊரக வேலை திட்ட பணிகளை மேற்கொள்ளும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அதை ஊராட்சி செயலாளர்கள் பணித்தல பொருப்பாளர்கள் உறுதிபடுத்த வேண்டும்

வியாபாரிகள் வெளியூர் சென்று அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்து வர உரிய நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது என பேசினார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News