Top
undefined
Begin typing your search above and press return to search.

13 வருடங்களுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக் கொண்ட தாவூத் கூட்டாளி - தடை விதிக்கப்பட்ட சமயத்தில் பருப்பு ஏற்றுமதி செய்த வழக்கில் நீதிமன்றக் காவல்.!

13 வருடங்களுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக் கொண்ட தாவூத் கூட்டாளி - தடை விதிக்கப்பட்ட சமயத்தில் பருப்பு ஏற்றுமதி செய்த வழக்கில் நீதிமன்றக் காவல்.!

MahalakshmiBy : Mahalakshmi

  |  16 Sep 2020 1:59 AM GMT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியின் போது பல கேபினட் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ₹ 250 கோடி பருப்பு ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் விசாரிக்கப்பட்டு வந்த நரேஷ் ஜெய்ன் என்ற ஹவாலா டீலர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2007ஆம் ஆண்டு பருப்பு வகைகளின் விலை திடீரென உச்சத்தை எட்டிய போது ஏற்றுமதியைத் தடை செய்து உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை சில நிறுவனங்கள் மீறியதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டறிந்தது. இதையடுத்து மத்திய அரசு இது பற்றி விசாரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. துபாயில் இயங்கி வந்த நரேஷ் ஜெய்னுக்கு சொந்தமான நிறுவனங்கள் பற்றி வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ஆய்வு செய்த போது தேடப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய நரேஷ் ஜெயினை ஹவாலா டீலராக செயல்பட்டது கண்டறியப்பட்டது.

இதில் சில அமைச்சர்கள், அரசியல்வாதிகளுக்கும் பங்கு இருப்பதைக் கண்டறிந்த சில அரிசி வியாபாரிகள் தடை அமலில் இருந்த போது பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்ததையும் கண்டறிந்தனர். இதன் பின்னர் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பில் இருக்கும் தொடர்புக்காக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அளிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நரேஷ் ஜெய்ன் கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு அமலாக்கத் துறையால் விசாரணை செய்யப்பட்ட ஜெர்மன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகள் ரெட் கார்னர் கார்னர் நோட்டீஸ் விடுத்து இருந்தும் எப்படியோ சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இருந்து தப்பி இருக்கிறார். அவரைக் கைது செய்யாமல் விட்ட டெல்லி காவல்துறையில் அவருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. குமார் ட்ரேடிங், அல்-கலீஜ் சப்போர்ட் சர்வீசஸ், பான் குளோபல் ட்ரேடிங் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்கள் தான் ஜூன் 22, 2006 மற்றும் மார்ச் 31, 2007 இடையிலான கால கட்டத்தில் பருப்பு ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்திருந்த போது சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட ₹ 250 கோடி மதிப்புள்ள 60,000 டன் பருப்பை பெற்றுள்ளன.

இந்த வழக்கில் முகேஷ் கோச்சார் என்ற தாவூத் இப்ராஹிமின் மற்றொரு கூட்டாளியும் சம்பந்தப்பட்டிருப்பதே சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு முகமையால் கண்டுபிடிக்கப்பட்டது. முகேஷ் கோச்சார் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரரான மர்லோன் சாமுவேல்ஸ் உடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபடுவது பற்றிஅளவிலானௌ பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. முகேஷ் கோச்சார் மற்றும் நரேஷ் ஜெய்னுடன் தொடர்புடைய இரண்டு பெரிய அரிசி ஏற்றுமதி நிறுவனங்கள் அரசு தடை விதித்திருந்த கால கட்டத்தில் பருப்பு ஏற்றுமதி செய்துள்ளன. தற்போது அமலாக்கத் துறையின் ஒரு வார கால விசாரணைக்குப் பின் இந்த ஊழலில் தனது பங்கை ஒத்துக்கொண்டுள்ள நரேஷ் ஜெய்ன் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Next Story