Kathir News
Begin typing your search above and press return to search.

அமேசான் பிரைமில் நாளை முதல் தாராள பிரபு - அதிரடி முடிவு!

அமேசான் பிரைமில் நாளை முதல் தாராள பிரபு - அதிரடி முடிவு!

அமேசான் பிரைமில் நாளை முதல் தாராள பிரபு - அதிரடி முடிவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 April 2020 4:01 AM GMT

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான "தாராள பிரபு" கடந்த மாதம் 12-ஆம் தேதி வெளியானது. ரசிகர்களிடையே அப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் தான் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு படம் வெளியான மூன்று நாட்களிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் படத்தை மறு வெளியீடு செய்யவிருப்பதாக அதன் தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் அறிவித்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இணையதளத்தில் முறைகேடாக வெளியானது 'தாராள பிரபு'. இதனால் என்ன செய்யலாம் என ஆலோசித்த படக்குழு அதிரடியாக அமேசான் ப்ரைமில் இப்படத்தை வெளியிடவுள்ளது. நாளை, ஏப்ரல் 9-ஆம் தேதி இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News