Kathir News
Begin typing your search above and press return to search.

அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்! காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேரறுக்க முடிவு! 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைந்தனர்!!

அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்! காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேரறுக்க முடிவு! 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைந்தனர்!!

அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்! காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேரறுக்க முடிவு! 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைந்தனர்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2019 9:43 AM GMT



மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவுபடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். அவர், பயங்கரவாதம், பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆய்வு செய்துவிட்டு டில்லி திரும்பினார்.


அஜித் தோவல் டெல்லி வந்து அமித்ஷாவிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதனைத் தொடரந்து, காஷ்மீருக்கு 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அதாவது 100 கம்பெனி ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கம்பெனியிலும் 100 ராணுவ வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானம் மூலம் ராணுவ வீரர்கள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இது குறித்து உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், “பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமர்நாத் யாத்திரைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட 40 ஆயிரம் துணை ராணுவப்படையினர் காஷ்மீர் அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எனவே காஷ்மீரில் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழித்துக்கட்டும் பணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவிட்டார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


Next Story