Kathir News
Begin typing your search above and press return to search.

#Opinion - டெல்லி கலவரம் : 'மதசார்பின்மைவாதிகளின்' அப்பட்டமான பொய்களும் அதன் பின்னணியும்.!

#Opinion - டெல்லி கலவரம் : 'மதசார்பின்மைவாதிகளின்' அப்பட்டமான பொய்களும் அதன் பின்னணியும்.!

#Opinion - டெல்லி கலவரம் : மதசார்பின்மைவாதிகளின் அப்பட்டமான பொய்களும் அதன் பின்னணியும்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 1:01 PM GMT

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் என்பதை சாக்காகக் கொண்டு டெல்லியில் நிகழ்த்தப்பட்ட இந்து விரோத கலவரங்கள், ஏன் நடந்தன? அதன் பின்புலத்தில் யார் இருந்தது? என்று கேள்விகளுக்கான விடை நாம் கொஞ்சம் யோசித்துப் பார்த்தோமானால் மிகவும் எளிது.

இந்த உலகத்தின் கண்கள் நம் மீது இருந்தன அமெரிக்காவின் அதிபரை வரவேற்பதற்காக டெல்லி தயாராக இருந்தது. அவர் வருவதற்கு முந்தைய மாலை, தலைநகரத்தில் கலவரங்கள் வெடித்தது. உலக ஊடகங்கள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும் போது டெல்லி நகரத்தின் மேல் கரும் புகை எழுந்தது.

அமெரிக்க அதிபர் தனது வருகையை முடித்து, விமானம் கிளம்பியது. கலவரமும் நின்றது. யாரோ ஸ்விட்ச்சை ஆஃப் செய்தது போல்.

இந்த கலவரத்தின் பின்னால் யார் இருந்தனர் என்பதை நாம் கேட்கக்கூட அவசியம் இல்லை. கொஞ்சம் அறிவு இருப்பவர்கள் அனைவருக்கும் இது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானவர்கள், அவரை உலகத்தின் முன்னால் அவமானப்படுத்துவதற்காக செய்தது என்பது தெளிவாக புரியும்.

ஆனால் இந்த விஷயத்தில் அந்தப் பொதுவான அறிவிற்கு இரண்டு பயங்கரமான எதிரிகள் இருந்தார்கள். பொய்களை கொஞ்சமும் வெட்கமில்லாமல் அள்ளித் தெளிக்கும் 'தாராளவாத' கும்பல் மற்றும் உலக ஊடகங்களின் மீதான அவர்களின் இரும்பு பிடி. எனவே இந்த கலவரங்களின் மீதான பழி இந்துக்களின் மீது விழுந்தது. முக்கியமாக வலதுசாரி ஹிந்துக்கள். டெல்லியில் கலவரங்களை ஒருங்கிணைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, இது 'இனப்படுகொலை' என்று கூறுமளவிற்கு பலரும் சென்றனர்.

ஆனால் முதல் நாள் முதல் இது ஒரு எளிதான வழக்கு. இதில் யாருக்கு நோக்கம் இருந்தது என்பது தெளிவாக தெரிந்தது. பெட்ரோல் பாம்களும் கற்களும், 'மதசார்பற்ற' தலைவர்களின் வீடுகளில் இருந்து எடுக்கப்பட்டதாக பல வீடியோக்கள் வலம் வந்தன.போலீஸ் குழுக்களும் ஊடகவியலாளர்களும் பின்னர் ஆசிட், கற்கள், இரும்புக் கம்பிகள், பெட்ரோல் பாம்கள் மற்றும் கலவரத்திற்கு தேவையான தோட்டாக்கள் அனைத்தும் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஒருவரல்ல இருவரல்ல ஒட்டுமொத்த ஏரியாக்களும் IB ஊழியரான அன்கிட் ஷர்மாவை யார் கொன்றது என்பதை சுட்டிக்காட்டினர். ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல் மாற்றி தொலைக்காட்சி சானலில் அங்கிட் ஷர்மாவின் இறந்த சடலத்தை சாக்கடையிலிருந்து எடுக்கும் வீடியோக்களை நாம் பார்த்தோம். அவர் மீதான காயங்கள் எண்ணும் அளவை விட அதிகம்.

ஆனாலும் இந்துக்களின் மீது சுமத்தப்பட்ட குற்றம் தொடர்ந்தது. இந்துக்களை பல பெயர்களைக் கொண்டு அழைத்தனர், நாசி என்று தொடங்கி.

இப்போது தாஹிர் ஹுசைனிடமிருந்து இருந்து நமக்கு ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கிடைத்துள்ளது.
இந்த வாக்குமூலத்தில், இந்துக்களுக்கு தான் ஒரு பாடம் கற்பிக்க விரும்பியதாக தாஹிர் ஹுசைன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவருடைய ஒப்புதல் வாக்குமூலத்தில் மேலும் காலித் சைபி மற்றும் உமர் காலித் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வையும் பெயரிட்டுள்ளார்.

அவ்வளவுதான், 'தாராளவாத' கும்பல் அதற்கு முன்னே அங்கு சென்று விட்டார்கள். அவர்கள் காலிஃக்கு ஆதரவாக சிறிது நாட்களுக்கு முன்பு குரல் கொடுக்க ஆரம்பித்தனர். ஏனென்றால் அவருக்கு மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்களாம். இது 'தலைமை ஆசிரியரின் மகன்', 'கணக்கு வாத்தியார்', 'வீடியோ கேம் விளையாடுபவர்' எப்போதெல்லாம் ஒரு 'மதசார்பின்மைவாதி' குற்றம் சுமத்தப்படுகிறாரோ, அப்போதெல்லாம் அவர் வாழ்க்கையில் உள்ள ஒரு மிகச்சிறிய மனித அங்கத்தை எடுத்து அதை ஊதி ஊதி பெரிதாக்கி விடுவார்கள்.

இந்த உலகத்தில் ஒசாமா பின்லேடனை 'கணவர் மற்றும் அப்பா' என்று அழைத்தும் ISIS தலைவர் பாக்தாதியை 'தீவிரமான மத போதகர்' என்றும் உருவகப்படுத்த தெரிந்த ஊடகங்களுக்கு ஒரு சிறிய மீனான காலிஃப்ட்டிற்கு அனுதாபம் உருவாக்குவது அவ்வளவு பெரிய விஷயமில்லை தான்.

இதனால் தான், எவ்வளவு உண்மைகள் மேலும் மேலும் குவிந்தாலும் உலக அளவில் டெல்லி கலவரங்களை பற்றிய தவறான கண்ணோட்டங்கள் தொடர்கிறது. அவர்களுக்கு ஹிந்துக்கள் மீது பழி போட, சாட்சிகள் இல்லை ஆதாரங்கள் இல்லை, வாக்குமூலங்கள் இல்லை, ஆனாலும் சக்தி வாய்ந்த இடங்களில் அவர்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் அதுவே போதுமானதாக இருக்கிறது.

ஊடகங்களின் மேல் இருக்கும் ஆதிக்கம் ஒருபுறம் என்றால் தயங்காமல் வெட்கம் இல்லாமல் பொய் சொல்வது மற்றொரு தூண். ஐந்து வருடங்களுக்கு முன்னால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 'மதச்சார்பற்ற' சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மும்பையில் ஒரு தீவிரவாதி யாகூப் மேமனுக்கு மரியாதை செலுத்துவதற்காக கூடினர். ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருந்தபோது செய்தனர். இந்தியாவின் வரலாற்றில் மோசமான தீவிரவாத தாக்குதலை ஏற்படுத்தியவருக்கு மரியாதை செலுத்த ஒரு பொது திருவிழா போல் நடந்தது.

இது இப்படி வெட்கம் இல்லாமல் பொய் சொல்வது தவறாக தோன்றலாம். ஆனால் அது வேலை செய்கிறது. பொது மக்களின் பார்வை படி ஒரு பொய்யை திரும்ப திரும்ப மக்களின் கண்ணை பார்த்து குழப்பமும் வருத்தமும் இல்லாமல் கூறிக் கொண்டே போனால் அவர்கள் நம்பத் தொடங்கி விடுவார்கள். 15,000 பேரை ஒரு தீவிரவாதி யாகூப் மேமனுக்கு தெருவுக்கு கொண்டு வருவது அருவருப்பானது. ஆனால் அது வேலை செய்தது. உலக கருத்துக்களின் படி அது வேலை செய்தது. அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தியாவில் நடக்கும் செய்திகள் அவ்வளவு உன்னிப்பாக தெரியாது. யார் அதிக தைரியத்துடன் பேசுகிறார்களோ அவர்கள் தான் நம்ப படுவார்கள்.

இதுதான் நவீன தாராளவாதம் அவர்கள் உங்களிடம் அவ்வளவு நம்பிக்கையுடன் பொய் கூறுவார்கள், நீங்கள் அவர்களை நம்ப தொடங்கி விடுவீர்கள்.

எனவே டெல்லி கலவரங்கள் பற்றிய தவறான கண்ணோட்டங்களில் இருந்து வெளியே வருவோம். நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். யாருக்கு கலவரங்களை நடத்த நோக்கம் இருந்தது?

Translated From: https://www.opindia.com/2020/08/delhi-riots-seculars-tahir-hussain-khalid-saifi-media/

Next Story