Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் வன்முறையை தூண்டி 38 பேர் பலியாக காரணமான ஆம் ஆத்மி முஸ்லிம் பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்!

டெல்லியில் வன்முறையை தூண்டி 38 பேர் பலியாக காரணமான ஆம் ஆத்மி முஸ்லிம் பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்!

டெல்லியில் வன்முறையை தூண்டி 38  பேர் பலியாக காரணமான ஆம் ஆத்மி முஸ்லிம் பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Feb 2020 3:20 PM IST

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லிக்கு வந்த நிலையில் வன்முறை போராட்டமாக மாறியது. இதனால் வெகுண்டெழுந்த குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் பதில் பேரணிகளை நடத்தினர். அப்போது இரு தரப்பு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளான வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் வன்முறை தலைவிரித்தாடியது. இந்துக்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். ஹிந்து ஆலயங்களை ஆக்கிரமித்து போர் களமாக்கினர்.

இந்த வன்முறையில் நேற்று வரை தலைமைக் காவலர், உளவுத்துறை அதிகாரி உள்ளிட்ட 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா கொல்லப்பட்னர்.

இந்த நிலையில் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் பகுதிகளில் கலவரத்தை தூண்டி கலவரக்காரர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததாகவும், உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மாவை கொடூரமான முறையில் கொலை செய்ததற்காகவும் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை, தீவைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முஸ்லிம்களை வன்முறைக்கு தூண்டி 38 பேர் மரணத்துக்கு காரணமான தாஹிர் உசேன் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான போலீஸ் விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News