"முதல்வர் பதவியின் மரியாதையையே குலைக்கும் நாராயணசாமி", பொங்கிய கிரண் பேடி - உச்சக்கட்ட பரபரப்பில் புதுச்சேரி!
"முதல்வர் பதவியின் மரியாதையையே குலைக்கும் நாராயணசாமி", பொங்கிய கிரண் பேடி - உச்சக்கட்ட பரபரப்பில் புதுச்சேரி!

வளமான புதுச்சேரியை உருவாக்க மாநில துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து கிரண்பேடி வார இறுதி நாட்களில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குறிப்பாக கிராமப்புறங்களில் ஆய்வு செய்து அங்குள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்வுகண்டார். இதனிடையே துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொள்ள கூடாது என முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர் இதனால் அதிகார மோதல் இருந்து வந்தது மேலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் நாள்தோறும் ராஜ் நிவாஸில் இருந்தபடி அதிகாரிகளுடன் தொலைபேசி மூலமாக கொரோனா குறித்து நாள்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நேற்று தொலைபேசியில் பேசிய மாநில முதலமைச்சர் நாராயணசாமி, அரசின் அன்றாட நிகழ்வுகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுகிறார், அரசி போடக்கூடாது என முட்டுக்கட்டையாக உள்ளார் போன்ற பல்வேறு புகார்களை தெரிவித்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி, பிரமரிடம் புகார் அளித்தது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது வாட்ஸ் அப்பில் இன்று விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார் அதில், முதலமைச்சர் நாராயணசாமி மீண்டும் பொய் கூறியுள்ளார் என்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு அரிசி, பருப்பு வழங்க ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்கும் அரிசி வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளதால் இந்தக் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும், இது தொடர்பான எந்தக் கோப்பும் ஆளுநர் அலுவலகத்தில் இல்லை என்றும் இவ்விஷயத்தில் ஆளுநர் எங்கு வந்து தலையிட்டார் என்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர் தொடர்ந்து பொய் கூறுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் முதலமைச்சரின் பதவியின் மீதான மரியாதையையும், நம்பிக்கையையும் சீர்குலைத்து வருகிறார் என்றும் மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுக்கும்போது நம்பிக்கையையும் தக்கவைப்பது அவசியம். உண்மையான நிலை குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.