இவரா தனுஷின் அடுத்த படத்தின் நாயகி ?
இவரா தனுஷின் அடுத்த படத்தின் நாயகி ?

கார்த்திக் சுப்பாராஜின் 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்துள்ள தனுஷ் அடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார். ஊரடங்கு ரத்தானவுடன் இதன் படப்பிடிப்பை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை 42 நாட்களில் முடித்துத் தருவதாகத் தயாரிப்பு தரப்பிடம் தெரிவித்துள்ள கார்த்திக் நரேன், திரைகதாசியர்களான சுஹாஸ் - ஷ்ராஃபுடன் இனைத்து திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக நடிக்க மாளவிகா மோகனன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாளவிகா மோகனன் தேதிகள் தர தயாராக இருந்தாலும், அவர் பெரிய சம்பளம் கேட்பதால் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறுகிறார்கள். ஒரு வேளை அவர் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை என்றால் ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்யப் படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம்.